இனிக்க இனிக்க பேசி காரியத்தை சாதித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்ட 5 ராசிகள்!

ஜோதிட சாஸ்திரத்தில், ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் இருக்கும் குண நலன்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ராசிக்கும், ஏதோ ஒரு கிரகம் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கும். அதற்கு ஏற்றபடி அவர்களது குண நலன்கள் இருக்கும்.

ராசிகளை பொறுத்தவரை, அந்த ராசிகளை ஆளும் கிரகத்தை பொருத்து, அவர்களது குணாதிசயங்கள் மாறும் நிலையில், பேச்சுத்திறனாள் காரியத்தை சாதித்து கொள்ளும் ராசிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

1 /7

சில ராசிக்காரர்களுக்கு, மற்றவர்களை கவரும் வகையில் இனிமையாக பேசி, காரியத்தை சாதித்துக் கொள்ளும் திறன் உண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இயல்பாகவே பேச்சு திறன் கொண்ட அத்தகைய ராசிகள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.

2 /7

மிதுன ராசிக்கு அதிபதி புதபகவான். இதனால் இவர்களுக்கு இயல்பாகவே பேச்சுத்திறனும் புத்திசாலித்தனமும் அபரிமிதமாக இருக்கும். நினைத்த காரியத்தை நிறைவேற்ற, வாய்ப்பு அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் திறன் இவர்களுக்கு உண்டு. இதனால் வேலையிலும் தொழிலும் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

3 /7

கடக ராசிக்கு அதிபதி சந்திரன். இதனால் இவர்களது பேச்சிலும் தோற்றத்திலும் ஒரு வசீகரம் இருக்கும். சண்டை சச்சரவுகள் இவர்களுக்கு என்றுமே பிடிக்காது. எல்லோரையும் அனுசரித்துப் போகும் குணம் இருக்கும். மற்றவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் பண்பின் காரணமாக, இவர்களுக்கு நல்ல மதிப்பு இருக்கும்.

4 /7

கன்னி ராசிக்கு அதிபதி புத பகவான். அறிவாற்றலை வழங்கும் புத பகவான் வலுவாக இருப்பதால், இவர்களுக்கு பேச்சாற்றல் சிறப்பாக இருக்கும். தங்கள் கருத்தை மற்றவர்களுக்கு சிறப்பாக புரிய வைத்து, அவர்களிடம் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தும் திறன் கொண்டவர்கள். இதனால் இவர்கள் தங்கள் வேலையை எளிதாக சாதித்துக் கொள்வார்கள்.

5 /7

விருச்சிக ராசிக்கு அதிபதி செவ்வாய். இவர்களுக்கும் பேச்சாற்றல் அபரிமிதமாக இருக்கும். தங்கள் கருத்தில் உறுதியாக இருப்பதோடு, மற்றவர்கள் மனதையும் தன் பேச்சின் மூலம் மாற்றும் திறன் இவர்களுக்கு உண்டு. இதனால் இவர்கள் எளிதாக காரியத்தை சாதித்துக் கொள்வார்கள்.  

6 /7

மீன ராசிக்கான அதிபதி குரு பகவான். அறிவாற்றலை அள்ளி வழங்கும் குரு பகவான் ஆதிக்கம் செலுத்துவதால், இவர்களுடைய செயல் திறன் அபாரமாக இருக்கும். மற்றவர்கள் மனம் கோணாமல் பேசி, சாதுரியமாக தன் காரியத்தை முடித்துக் கொள்ளும் திறன் இவர்களிடம் இருக்கும்.

7 /7

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.