Salt Water: வெந்நீருடன் கூட்டு வைத்து உப்பு செய்யும் மாயம்! தொண்டை பிரச்சனைக்கு அதிரடி நிவாரணம்

 உப்பில் இயற்கையாகவே ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது தொண்டை மற்றும் வாயில் இருக்கும் பாக்டீரியாக்களின் அளவை குறைக்க உதவி செய்கிறது. இதனால் தொற்றுக்கள் ஏற்படாமல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.  

Salt Water Gargling: உப்பில் இயற்கையாகவே ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது தொண்டை மற்றும் வாயில் இருக்கும் பாக்டீரியாக்களின் அளவை குறைக்க உதவி செய்கிறது. இதனால் தொற்றுக்கள் ஏற்படாமல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.  

1 /7

எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட உப்பு, ஒரு துளி அதிகமானாலும் ஆரோக்கியத்தி கெடுத்துவிடும். ஆனால், உப்பு இல்லாவிட்டாலும் நமது ஆரோக்கியம் பாதிக்கப்படும். உப்பு வீக்கமடைந்திருக்கும் திசுக்களில் இருக்கும் அதிகப்படியான திரவத்தை வெளியேற்ற உதவுகிறது.

2 /7

உப்பில் இயற்கையாகவே ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் காணப்படுகின்றன. எனவே உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது தொண்டை மற்றும் வாயில் இருக்கும் பாக்டீரியாக்களின் அளவை குறைக்க உதவுகிறது

3 /7

உப்பு நீர் கொண்டு வாய் கொப்பளிக்கும் முறை என்பது, மிகவும் பழமையான தீர்வு என்றாலும், இது இன்றும் நவீன மருத்துவர்களாலும் பரிந்துரைக்கப்படும் எளிய முறை ஆகும்.  

4 /7

ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தண்ணீரால் வாய் கொப்பளிப்பதால், சுவாச பிரச்சனைகள் மற்றும் அல்சர் குறைகிறது. பல் பிரச்சனைகள் மற்றும் ஈறு வலி ஏற்படும் போது உப்பு நீரை கொண்டு வாய்க் கொப்பளித்தால் நிவாரணம் கிடைக்கும்  

5 /7

உப்பு நீர் கொண்டு கொப்பளிப்பதால் வாயில் உள்ள அமில அளவு சமநிலை அடைகிறது, அதன் pH அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதனால் பற்குழிகள் தடுக்கப்படுகின்றன. வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் பூஞ்சை தொற்று பரவாமல் பாதுகாக்க வெந்நீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளித்து வரவும்

6 /7

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கால் ஸ்பூன் அளவு உப்பு சேர்த்து கலக்கவும். வாயில் வெந்நீரை தொண்டையில் நிற்கும்படி வைத்து 30 நொடிகள் அதை வாய்க்குள் சுழற்றவும். பிறகு வாயில் இருக்கும் நீரை சுழற்றி வாய் முழுவதும் பரவவிட்டு பின்பு துப்பிவிடவும். இப்படி பல முறை செய்தால்,  சளி மற்றும் தொண்டை வறட்சி ஓடியே போய்விடும். ஒரு நாளைக்கு இரண்டு முறை உப்பு நீர் கொண்டு வாய் கொப்பளிக்கவும்.

7 /7

(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த  பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)