உடல் எடையை குறைக்கணுமா? சீரகம் உங்களுக்கு சூப்பரா உதவும்!!

Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பது மக்களுக்கு பொதுவான பிரச்சனையாகி வருகிறது. அதிகரிக்கும் எடை சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களை கொண்டு வருகிறது. உடல் பருமனால் சிரமப்படுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

உடல் எடையை குறைக்க முயற்சிக்க வேண்டும். உங்களால் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடியாவிட்டால், சில எளிய இயற்கையான வழிகள் மூலம் உடல் எடையை குறைக்கலாம். உடல் என்னும் அகத்தை சீர் செய்யும் சீரகத்தை கொண்டு உடல் எடையை எவ்வாறு குறைப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

1 /5

இந்தியாவில் அனைத்து சமையலறைகளிலும் கிடைக்கும் சீரகத்தில் கால்சியம், இரும்பு, துத்தநாகம், மாங்கனீஸ் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நிறைந்துள்ளன. தினமும் சீரகத்தை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், உடலில் கொழுப்பு படியாமல், உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படும். இதை தயாரிக்க, ஒரு கிளாஸ் தண்ணீரில் 2 டீஸ்பூன் சீரகத்தைப் போட்டு, இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன், எடை இழப்புக்கு அந்த ஜீரக தண்ணீரை கொதிக்க வைத்து, தேநீர் போல குடிக்கவும். இதனால் ஏற்படும் விளைவை விரைவில் உணரத் தொடங்குவீர்கள்.  

2 /5

கறிவேப்பிலை மற்றும் சீரக நீரின் கலவையும் எடை இழப்புக்கு நல்லதாக கருதப்படுகிறது. இதைப் பயன்படுத்த, இரவில் ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து, அதில் 1 தேக்கரண்டி சீரகம் மற்றும் 7 கறிவேப்பிலையை கழுவிப் போடவும். காலையில் எழுந்ததும் அந்த நீரை ஃபில்டர் செய்து குடிக்கவும். இந்த தண்ணீரை குடிப்பதால், உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரித்து, உடல் எடை கட்டுக்குள் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

3 /5

சீரகம் மற்றும் கொத்தமல்லி நீர் சுவையாக இருப்பது மட்டுமின்றி உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்கும். நீங்கள் இதைப் பயன்படுத்த விரும்பினால், ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிது கொத்தமல்லி மற்றும் சீரகத்தைப் போட்டு வைக்கவும். காலையில் எழுந்ததும் அந்த நீரை வடிகட்டி குடிக்கவும். இந்த வைத்தியம் உடல் பருமனை குறைப்பது மட்டுமின்றி நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும்.

4 /5

அதிகரித்து வரும் உடல் பருமனை போக்க சீரக நீரை அருந்தலாம். இந்த பானம் தயாரிக்க, முதலில் ஒரு கிளாஸ் தண்ணீரை சூடாக்கவும். அதன் பிறகு, அதில் ஒரு ஸ்பூன் சீரகப் பொடி சேர்க்கவும். இதனுடன் கருப்பு உப்பும் சேர்த்து சுவையை கூட்டலாம். அதன் பிறகு இந்த தண்ணீரை ஆறவைத்து குடிக்கவும். இதனால் உங்கள் வயிறு படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

5 /5

சீரகத்துடன் எலுமிச்சை நீரை சேர்த்து குடிப்பது எடையைக் குறைக்க ஒரு சிறந்த வழியாகும். இதை செய்ய, 2 டீஸ்பூன் சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் எழுந்ததும் இதை நன்கு கொதிக்கவிடவும். அதன் பிறகு, அதை வடிகட்டி ஆறவைத்து, எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும். இதனால் உடல் எடைகுறைவதை கண்கூடாக காணலாம்.  (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)