மே 20-27 வார ராசிபலன்: தடைகள் நீங்கி பணமழையில் நனையும் 4 ராசிகள்!

Weekly Horoscope Lucky Zodiacs: இன்று முதல் ஞாயிறு வரை 7 நாட்கள் எந்த ராசிகளுக்கு பொன்னான நாட்கள்? தடைகள் நீங்கி, நிம்மதியாய் வாழப்போகும் அதிர்ஷ்ட ராசிகள்.. 

Lucky Rasis May 20-27 In Tamil:  இந்த வாரத்தின் முதல் நாளான இன்று மே 20 முதல் ஞாயிற்றுக்கிழமை வரையிலான முழு வாரமும் அதிர்ஷ்டத்தில் திளைக்கப்போகும் ராசிகள் 4 மட்டுமே... இந்த ராசிக்காரர்களுக்கு நிம்மதி அதிகரிக்கும். இது பொதுவான பலன் தான், அவரவர் ஜாதகத்திற்கு ஏற்றாற்போல பலன்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம், ஆனால், நிம்மதியாக இருக்கலாம்.  

1 /7

குரோதி ஆண்டு வைகாசி 7ம் தேதி முதல் 13ம் தேதி வரையிலான ஒரு வார காலத்திற்கான ராசிபலன்களில் சில ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கவிருக்கின்றன. அந்த ராசிகள் மட்டும் ஏன் அதிர்ஷ்டத்தைப் பெறுகின்றன? 

2 /7

அதிர்ஷ்டமோ துரதிருஷ்டமோ அது நவகிரகங்களின் இருப்பைப் பொறுத்து தான் ராசி மண்டலத்தின் 12 ராசிகளையும் பாதிக்கும். அந்த வகையில் இந்த வாரத்தில் அதிர்ஷ்டத்தின் பலனைப் பெறப்போகும் ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்

3 /7

மீன ராசிக்காரர்களுக்கு பயணங்கள் செய்வதற்கான விருப்பம் அதிகரிக்கும் வாரம் இது. சுற்றுலா செல்ல திட்டமிடுவதற்கான காலம் இது. பிறரின் விமர்சனங்கள் உங்களை பாதித்தாலும் கவலைப்படாமல் இருந்தால் நிம்மதி உங்களுடையது தான். வாழ்க்கையின் எதார்த்தத்தைப் புரிந்துக் கொண்டு நடப்பதால் உங்களுக்கு இந்த வாரம் நிம்மதி நிச்சயம்... எதிர்பாராத பணவரவுகளுக்கு வாய்ப்பு உள்ளது.

4 /7

கன்னி ராசிக்காரர்களுக்கு அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். நிதி நிலைமை வலுவாக இருக்கும். முதலீடுகளால் நல்ல லாபத்தை பெறலாம். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்

5 /7

காதல் வாழ்க்கை மட்டுமல்ல நட்பு வட்டாரமும் நல்ல செய்திகளைத் தந்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும். குடும்பப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.  

6 /7

நினைத்ததை நடத்தி முடிக்கும் அதிர்ஷ்டம் உங்களுக்கு உண்டு, மனதில் மகிழ்ச்சி பொங்கும். உத்வேகத்துடன் காரியம் செய்யும் உங்களுக்கு இந்த வாரம் காரிய சித்தி மட்டுமல்ல பண வரவும் அதிகரிக்கும்

7 /7

பொறுப்புத் துறப்பு:  இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை