UCC: உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக அரசு பொது சிவில் சட்ட மசோதாவை அறிமுகம் செய்தது! பின்னணி

Uniform Civil Code: 2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வந்துவிடலாம் என்ற சூழ்நிலையில், பாஜக ஆட்சி நடக்கும் உத்தராகாண்ட் மாநில அரசு, பொது சிவில் சட்டத்தை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது...

நாடு முழுவதுக்கும் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இந்திய சட்ட ஆணையம் அரசியல் கட்சியினர், மத அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்டுள்ள நிலையில், தற்போது பாஜக ஆளும் மாநில அரசு பொதுத் தேர்தலுக்கு முன் இந்த மசோதாவை அறிமுகப்படுத்துவது பரவலாக விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

1 /7

உத்தராகண்ட் மாநில தேர்தலின்போது, பாஜக ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் அமலாகும் என தேர்தல் அறிக்கையில் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாக மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார் 

2 /7

பொது சிவில் சட்டம் தொடர்பாக ஆலோசித்து அறிக்கை தயாரிக்க புஷ்கர் சிங் தாமி அரசு 5-பேர் கொண்ட குழுவை அமைத்திருந்தது. அந்த குழுவினர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் அரசு யுசிசி மசோதாவை தயாரித்துள்ளது

3 /7

யுசிசி மசோதாவை தயாரிக்க மாநில அரசு குழு ஒன்றை நியமித்தது. அந்தக் குழுவின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் நியமிக்கப்பட்டார். இந்த அறிக்கை ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டது, ஆனால் யாரும் அதை தவறாக அர்த்தம் கொள்ளக்கூடாது என்பதற்காக, குழுவினரே அதை இந்தியிலும் மொழிபெயர்த்து இரு மொழிகளில் அரசிடம் சமர்ப்பித்தனர்

4 /7

யுசிசி மசோதா தயாரித்த குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய். இவரைத் தவிர, டாக்டர் சுரேகா டங்வால், மனு கவுர், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் சத்ருகன் சிங், ஓய்வுபெற்ற நீதிபதி பிரமோத் கோஹ்லி என ஐவர் அணி இந்த மசோதாவை தயாரித்தது

5 /7

குழு சமர்பித்த அறிக்கையை மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அரசு நேற்று ஏற்றுக் கொண்டு ஒப்புதல் வழங்கியது. இச்சட்ட மசோதாவை தாக்கல் செய்ய இன்று  கூட்டப்பட்ட  சிறப்பு கூட்டத்தொடரில் முதலமைச்சர் தாமி மசோதாவை தாக்கல் செய்தார்.

6 /7

உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட (Uniform Civil Code) மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த வரைவு மசோதா சட்டமாக மாற எத்தனை நாள் ஆகும் என்று தெரியவில்லை. 

7 /7

பொது சிவில் சட்ட (Uniform Civil Code) மசோதா சட்டமாக மாறினால், இந்தியாவிலேயே பொது சிவில் சட்டத்தை முதலில் அமல்படுத்திய மாநிலம் என்ற பெருமையை உத்தரகாண்ட் மாநிலம் பெறும்