1 மாதுளை பல பலன்கள்.. வியக்க வைக்கும் மாதுளை ஜூஸின் நன்மைகள்

தினமும் 1 கப் மாதுளை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.   ​

மாதுளையில் இரும்புச் சத்து மிக அதிகம். இதனால் ரத்த அணுக்கள் பெருகும். ஹீமோகுளோபின் தினசரி ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

 

1 /5

மாதுளையில் உள்ள பாலிபினால்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், கொழுப்பை எரிக்கவும் உதவுகின்றன. இது உங்கள் பசியை கட்டுப்படுத்தி நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும்.

2 /5

அதன் பாலிபினால் உள்ளடக்கம் காரணமாக, மாதுளை சாறு அழற்சி குடல் நோய் (IBD) மற்றும் பிற குடல் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு உதவக்கூடும்.

3 /5

மாதுளை தொப்பையில் உள்ள கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. மேலும் இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் வெகு எளிதில் பசியை தூண்டாது. எனவே அதிகப்படியான உணவை உட்கொள்வதில் இருந்து இது நம்மை கட்டுப்படுத்துகிறது. நமது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும், உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.

4 /5

உங்களுக்கு அடிக்கடி மூட்டுகளில் அல்லது உடலின் ஏதேனும் வலி இருந்தால், நீங்கள் மாதுளை சாறு குடிக்க வேண்டும். குருத்தெலும்புகளை உடைக்கும் என்சைம்களை நீக்கி பாதுகாக்கிறது. இதனை தினமும் குடித்து வந்தால் முழங்கால் வலி குறையும்.

5 /5

மாதுளை சாறு நம் கூந்தல் மற்றும் சருமம் இரண்டிற்கும் மிகவும் நல்லது. மாதுளம் பழச்சாறு குடிப்பதன் மூலம், நமது சரும செல்கள் மீளுருவாக்கம் செய்யப்பட்டு, முகப்பரு மற்றும் பரு பிரச்சனைகள் நீங்கும். இது உங்கள் சருமத்தை மென்மையாக்க உதவுகிறது.