Side Effects of Pistachio: பிஸ்தா பருப்பு... ‘இந்த’ பிரச்சனை இருந்தா விலகியே இருங்க!

உலர் பழங்களில் பிஸ்தா பருப்பு மிகவும் சுவையானது. பிஸ்தாவின் உப்பு சுவை பலருக்கு மிகவும் பிடிக்கும். வைட்டமின்கள், கனிம சத்து, ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த பிஸ்தா சாப்பிடுவதன் மூலம் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கலாம். இது உடலில் இருந்து சோர்வு மற்றும் பலவீனத்தை அகற்ற உதவும்.

பிஸ்தா பருப்பில் பல ன்மைகள் இருந்தாலும், சிலருக்கு பிஸ்தா ஆரோக்கியத்தை பாதிக்கும். குறிப்பிட்ட சில பிரச்சனை உள்ளவர்கள் பிஸ்தா சாப்பிட வேண்டாம் என்று  நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

1 /7

பிஸ்தா: ஊட்டசத்துக்களின் களஞ்சியமான பிஸ்தாவில், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், ஆக்ஸிஜனேற்றிகள், புரதம், வைட்டமின் பி6, நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. 

2 /7

ஒவ்வாமை: பிஸ்தா உடலுக்கு சூட்டை கொடுக்க கூடியது அத்தகைய சூழ்நிலையில், நட்ஸ் அல்லது விதைகள் ஒவ்வாமை உள்ளவர்கள் பிஸ்தா சாப்பிடக்கூடாது. இதனால் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின்றி பிஸ்தா சாப்பிட வேண்டாம்.

3 /7

சிறுநீரக நோயாளிகள்: சிறுநீரக கற்கள் இருந்தால் பிஸ்தா சாப்பிடக்கூடாது. பிஸ்தாவில் சிறுநீரக கற்கள் பிரச்சனையை ஏற்படுத்தும், ஆக்சலேட் எனப்படும் ஒரு கலவை உள்ளது எனவே, சிறுநீரக கற்கள் மீண்டும் கற்கள் உருவாகலாம்.

4 /7

உடல் பருமன்:  உடல் பருமனை குறைக்க விரும்புபவர்கள் பிஸ்தாவை முடிந்தவரை குறைவாக சாப்பிடுங்கள். கலோரிகள் அதிகம் பிஸ்தாவை  சாப்பிடுவதால் உடல் பருமன் குறைவதற்கு பதிலாக அதிகரிக்கலாம்.  உடல் எடையை குறைக்க டயட்டில் இருப்பவர்கள் பிஸ்தாவை தவிர்க்க வேண்டும்.

5 /7

செரிமான பிரச்சனை:  செரிமான பிரச்சனைகள் இருந்தால் பிஸ்தா சாப்பிடக்கூடாது. குறிப்பாக கோடை காலத்தில் பிஸ்தாவை குறைவாக சாப்பிடுங்கள். உடலுக்கு சூட்டைக் கொடுக்கும் பிஸ்தா அதிகம் சாப்பிடுவதால், அஜீரணம், அசிடிட்டி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

6 /7

நோய் சிகிச்சை: ஏதேனும் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு வழக்கமான மருந்துகளை உட்கொள்பவர்கள் தங்கள் உணவில் பிஸ்தா சாப்பிடலாமா என கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். சில சமயங்களில் பிஸ்தா சாப்பிடுவது சில மருந்துகளுடன் பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.