வக்ரமடையும் குரு... இனி ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் இன்பத்திற்கு பஞ்சமே இருக்காது!

மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், செழிப்பு, அறிவு மற்றும் திருமண மகிழ்ச்சியைத் தரும் குரு வக்ர பெயர்ச்சி ஆக போகிறது. குரு வக்ரமடைவதால்  வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

கிரகங்கள் பெயர்ச்சி ஆனால் மட்டுமல்ல, அவற்றி நிலை மாறும் போதும், அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் , குருவின் வக்ர பெயர்ச்சியினால் ஏற்படும் தாக்கத்தை அறிந்து கொள்ளலாம்.

1 /7

அதிர்ஷ்டத்தை தரும் கிரகம் குரு. குருவின் அருளால்தான் ஒருவருக்கு அறிவு, மகிழ்ச்சி, செழிப்பு, தாம்பத்திய சுகம் கிடைக்கும். செழிப்பு மற்றும் மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரணியாக குரு இருக்கிறார்.

2 /7

குரு பகவான் ஒரு வருடத்தில் ஒரு முறை ராசியை மாற்றுகிறது. இந்த ஆண்டு ஏப்ரலில் வியாழன் ராசியை மாற்றிவிட்டார். குரு பெயர்ச்சிக்குப் பிறகு மேஷ ராசியில் நுழைந்தார். இப்போது 4 செப்டம்பர் 2023 அன்று, குரு வக்ர நிலையை அடையப் போகிறார்.

3 /7

குரு வக்ர நிலை அடைவது அனைத்து ராசிகளின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார். இதனுடன், குருவின் வக்ர நிலை  சிலருக்கு மிகவும் சிறப்பான பலன்களைத் தரும். இவர்களது வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது.  

4 /7

தனுசு: குரு வக்ர நிலை தனுசு ராசிக்காரர்களுக்கு சில நல்ல செய்திகளை வழங்க முடியும். புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தையின் முன்னேற்றம் கூடும். ரியல் எஸ்டேட் ஆதாயங்களைப் பெறலாம். வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன், வசதிகளும் பெருகும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். உயர்கல்வி தொடர்பான எந்த கனவும் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.  

5 /7

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு குரு வக்ர நிலை பல நன்மைகளைத் தரும். குறிப்பாக தொழிலுக்கு,  பல நன்மைகளைத் தரும். புதிய வேலை கிடைக்கலாம். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் வரும். தொழில் செய்பவர்களுக்கும் இந்த நேரம் சிறப்பாக இருக்கும். உங்கள் பெரிய ஒப்பந்தம் உறுதிப்படுத்தப்படலாம். இது எதிர்காலத்தில் பெரிய பலனைத் தரும்.   

6 /7

மேஷம்: குரு வக்ர நிலை மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களை கொடுக்கும். மேஷத்தில், தான் குரு வக்ர நிலை அடையும் நிலையில்,  இந்த நேரம் இது இவர்கள் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். குருவின் அருளால் ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். நீங்கள் பணத்தை நன்றாக சேமிக்க முடியும். உங்கள் ஆளுமை சிறப்பாக இருக்கும். பண வரவு கிடைக்க வாய்ப்புகள் அமையும். தொழிலில் வளர்ச்சி இருக்கும்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.