Asafoetida: உணவில் தினமும் ஒரு சிட்டிகை பெருங்காயம் செய்யும் ஆரோக்கிய மாயம்! டிரை பண்ணி பாருங்க!

Perungayam Benefits For Health: உணவின் சுவையை மேம்படுத்துவதற்காக மட்டுமல்ல, பல்வேறு ஆரோக்கிய பண்புகளுக்காகவும் பெருங்காயம் நமது தினசரி உணவில் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக வயிற்று பிரச்சனைகள் மற்றும் செரிமானத்திற்கு பெருங்காயத்தின் பயன்கள் மிகவும் அறியப்பட்டவை..

சாம்பர் ரசம் என தென்னிந்திய உணவாக இருந்தாலும் சரி, தால், டோக்ளா என வட இந்திய உணவுகளாக இருந்தாலும் ஒரு சிட்டிகை பெருங்காயம் இல்லையெனில் அந்த உணவு ருசிக்காது. மணம் மிக்க பெருங்காயம் நோய் தீர்க்க மட்டுமல்ல, நோய்கள் வராமலும் தடுக்க உதவுகிறது

1 /7

நாம் உணவில் பயன்படுத்தும் மசாலாப் பொருட்களும் அந்தச் சுவையையும் பசியை  போக்குவதற்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கான பல நன்மைகளையும் வழங்குகின்றன. நாம் தினமும் ஒரு சிட்டிகை மட்டுமே பயன்படுத்தும் பெருங்காயமும் ஊட்டச் சத்து நிரம்பிய அத்தியாவசிய உணவுப்பொருளாகும். உடலின் பல அமைப்புகளை நிர்வகிக்க உதவும் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது பெருங்காயம்...

2 /7

3 /7

உடல் எடையைக் குறைக்க பெருங்காயம் அற்புதமான மருந்தாக பயன்படுகிறது. காலையில் வெறும் வயிற்றில் பெருங்காயத்தை தேனில் குழைத்து  உட்கொண்டால் கொழுப்பு குறையும். அதிகப்படியான கொழுப்பை கரைக்க பெருங்காயத்தின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உதவுகின்றன

4 /7

செரிமானக் கோளாறுகளை நீக்கும் ஆன்டாக்சிட் போல செயல்படும் பெருங்காயத்தில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிரம்பியுள்ளன. அஜீரணக் கோளாறுகள் ஏற்படாமல் இருக்க தினசரி ஒரு சிட்டிகை பெருங்காயமாவது உணவில் சேர்க்க வேண்டும்

5 /7

ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ள பெருங்காயம், சளி மற்றும் இருமலை எதிர்த்துப் போராடும் வலுல்வை உடலுக்குக் கொடுக்கிறது. அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு கொண்ட பெருங்காயம் காய்ச்சல் ஏற்படுவதையும் தடுக்கிறது  

6 /7

வயிற்றில் ஏற்படும் உப்புசம், பொருமல் அபான வாயு போன்ற பிரச்சனைகளுக்கு பெருங்காயம் ஒரே தீர்வு என்றே சொல்லலாம். உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக அமைவது நமது வயிற்றில் தங்கும் நச்சுக்களும் தேவையற்ற வாயுக்களும்தான். அதில் கழிவைக் கீழ் நோக்கித் தள்ளும் வாயுவின் பெயர் தான் அபான வாயு. இந்த வாயு வெளியேறும்போது நாம் பொதுவெளியில் இருந்தால் அசெளகரியமாக உணர்கிறோம்.

7 /7

உடலின் இரத்த அழுத்தத்தை சீர்படுத்த பெருங்காயம் உதவுகிறது. பெருங்காயத்தை சரியான அளவில் உட்கொள்ளும் போது, உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது. இரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்தவும் உதவும் பண்புகளைக் கொண்டது பெருங்காயம்