கருவளையங்கள் மாயமாய் மறைய... சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

ண்களுக்குக் கீழேயும் சுற்றிலும் ஏற்படும் கருவளையங்கள் தோற்றத்தை கெடுக்கின்றன. மன அழுத்தம், தூக்கமின்மை, தவறான வாழ்க்கை முறை, நீர் சத்து குறைதல்,ஹார்மோன் மாற்றங்கள் போன்ற பல காரணங்களால் கருவளையங்கள் ஏற்படுகின்றன. 

கருவளையங்கள் முகத்தின் அழகைக் கெடுப்பதோடு, வயதான தோற்றத்தையும் கொடுக்கும். இதனை விரட்ட  உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்களை அறிந்து கொண்டு பின்பற்றுவது தீர்வைத் தரும்.

1 /7

கருவளையங்கள் நீங்க ஒரு ஸ்பூன் தக்காளி சாற்றுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கருவளையங்கள் இருக்கும் இடத்தில் தடவி 10 நிமிடத்திற்கு பின் தண்ணீரில் சுத்தம் செய்தால், நல்ல பலன் காணலாம். 

2 /7

உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றை ஒரு பருத்தி துணியில் நனைத்து, கண்களை மூடிக்கொண்டு கருவளையத்தில் தடவி, வர நல்ல பலன் கிடைக்கும்.

3 /7

குளிர்ச்சியான டீ பைகளை தண்ணீரில் நனைத்து, சிறிது நேரம் பிரீசரில்  வைக்கவும். அதன் பிறகு கண்களை மூடி அந்த டீ பேக்கை கருவளையத்தில் வைத்து வர நல்ல பலன் தெரியும்.

4 /7

குளிர்ச்சியான பாலை பருத்தி துணியில் ஒத்தி எடுத்து, கண்களின் கருவளையத்தில் மீது வைப்பது பலன் தரும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

5 /7

ஆரஞ்சு சாறு மற்றும் கிளிசரின் சில துளிகள்  கலந்த கலவையை கருவளயங்கள் மீது தடவி வருவதன் மூலம், கருவளையங்கள் படிப்படியாக குறையும். மேலும், இது சருமத்திற்கு பொலிவையும் தருகிறது.

6 /7

மன அழுத்தம், தூக்கமின்மை, வாழ்க்கை முறை மாற்றங்கள்,ஹார்மோன் மாற்றங்கள் போன்றவற்றால் கருவளையம் ஏற்படுகிறது.  இந்நிலையில் தினமும் யோகா மற்றும் தியானம் கருவளையங்களை நீக்க உதவும்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.