IPL 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த போட்டி யாருடன் தெரியுமா?

Chennai Super Kings: கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 

1 /5

ஐபிஎல் 2024 போட்டிகள் நாளுக்கு நாள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.   

2 /5

முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி அடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் நேற்று கேகேஆர் அணிக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது.   

3 /5

சென்னை அணி அடுத்ததாக மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்காக பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.   

4 /5

கடந்த ஆண்டு மும்பை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸின் அபார வெற்றி பெற்றிருந்தது. இதற்கு பலி தீர்க்க மும்பை அணி தயாராகி வருகிறது.   

5 /5

மும்பை இந்தியன்ஸ் அணி தற்சமயம் நான்கு போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் தோல்வியுற்று ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. அடுத்ததாக பெங்களூர் அணிக்கு எதிராக ஏப்ரல் 11ம் தேதி மும்பையில் விளையாட உள்ளது.