குரு பெயர்ச்சி மே 1... பணம், ராஜ வாழ்க்கை பெறப் போகும் ராசிகள் இவைதான்

Guru Peyarchi Palangal 2024: ஜோதிடத்தின் படி, ஒன்பது கிரகங்களில் குரு மிகவும் முக்கியம் வாய்ந்த கிராகமாகும். குருவின் ராசி மாற்றம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த ராசி மாற்றத்தின் பலன் நாடு மற்றும் உலகம் முழுவதும் தெரியும் என்று நம்பப்படுகிறது.

Guru Peyarchi Palangal 2024: மே 1 ஆம் தேதி, குரு ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி அடையப் போகிறார். குரு ஒரு ராசியில் சுமார் ஒரு வருடம் தங்குகிறார். இந்த குரு பெயர்ச்சியின் தாக்கத்தை 12 ராசிகளிலும் காணலாம். இருப்பினும், 5 ராசிகளுக்கு மட்டும் சாதகமான பலனைத் தரப் போகிறது. இந்த ராசிக்காரர்கள் பணம், புகழ், அந்தஸ்த்து, அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். எனவே குருவின் ஆசியைப் பெறப்போக்கும் அந்த 5 ராசிகள் எவை என்று பார்ப்போம்.

1 /6

மேஷம்: குரு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுலக்கு ஒரு ஆசீர்வாத,மாக அமையும். வேலையில் நல்ல வெற்றியைப் பெறலாம். நிதி ஆதாயம் உண்டாகும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அலுவலகத்தில் நல்ல செய்தி கிடைக்கலாம். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு இனிவரும் காலம் நன்றாக இருக்கும். எதிர்பாராத நிதி நன்மைகளையும் பெறலாம். முதலீடு மூலம் லாபம் உண்டாகும்.  

2 /6

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சாதகமான பலன்களை தரும். திடீர் லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். பல இடங்களில் இருந்து நிதி நன்மைகளைப் பெறலாம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சமய காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு பெரிய மரியாதை கிடைக்கும்.  

3 /6

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி லாபத்தை தரும். நல்ல அதிர்ஷ்டத்தை பெறலாம். பொருள் ஆசைகள் நிறைவேறும். பணியில் இருந்த தடைகள் நீங்கும். நம்பிக்கை அதிகரிக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு காணலாம். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நல்ல ஆதரவைப் பெறலாம். வியாபாரத்தில் லாபம் கூடும். தொழிலில் வெற்றியும் முன்னேற்றமும் அடையலாம்.  

4 /6

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சியால் சிறப்பான சுப பலன்களைப் பெறலாம். தொழில் செய்பவர்களுக்கும் நேரம் சாதகமாக இருக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி ஆதாயம் உண்டாகும். ஆராய்ச்சியாளர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். அரசு வேலைக்குத் தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறலாம். குருவின் தாக்கத்தால் மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயம் உண்டாகும்.  

5 /6

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் கூடும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். தடைபட்ட வேலைகளை நிறைவடையும். சிக்கிய பணத்தை திரும்பப் பெறலாம். நிலம், வாகனம் வாங்கலாம். குருவின் தாக்கத்தால் உங்கள் வேலையில் வெற்றி கிடைக்கும்.  

6 /6

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.