அளவிற்கு மிஞ்சிய வெந்நீர் உடல் நலத்திற்கு கேடு; எச்சரிக்கும் நிபுணர்கள்!

சளி, இருமல், சளி, காய்ச்சல் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் போது  வெந்நீரைக் குடிக்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கு உள்ளது. இன்னும் சிலர் உடல் எடையைக் குறைக்கவும், சருமப் பிரச்சனைகளுக்காகவும் வெந்நீரைக் குடிப்பார்கள். வெந்நீர் குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன. இருப்பினும், அளவிற்கு மிஞ்சும் எதுவும் தீங்கு விளைவிக்கும். அதிக அளவில் சூடான நீரை உட்கொள்வது சில உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

1 /5

வெந்நீரை அதிக அளவு குடிப்பது கவனச் சிதறலை ஏற்படுத்தும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகப்படியான சூடான நீர் மூளை செல்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். இது உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தும்.

2 /5

வெந்நீர் அருந்துவதால் சிறுநீரகக் கோளாறுகளும் ஏற்படுகின்றன. சிறுநீரகங்கள்  உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது. வெந்நீரின் காரணமாக சிறுநீரகத்தின் மீது அதிக அழுத்தம் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 

3 /5

மிகவும் சூடான நீர் செரிமான அமைப்பில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. இது குடலையும் பாதிக்கிறது. குடல் பிரச்சனை உள்ளவர்கள் வெந்நீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் வெந்நீர் வாய் புண்களை உண்டாக்கும்.

4 /5

வெந்நீரை அடிக்கடி குடிப்பது பல கடுமையான பிரச்சனைகளை உண்டாக்கும். இது மூளை மற்றும் சுவாச நோய்களை ஏற்படுத்தும். வெந்நீரை அதிகமாக குடிப்பதால் சுவாச பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

5 /5

வெந்நீரை அதிகமாக குடிப்பதால் நமது உடலின் உள் உறுப்புகள் பாதிக்கப்படுகிறது. வெந்நீரை அதிகமாக குடிப்பதால் நெஞ்செரிச்சல் ஏற்படும். இது வயிறு தொடர்பான ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.  (பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)