EPF Withdrawal Rules: பணி ஓய்வுக்கு முன்னரே 100% இபிஎஃப் பணத்தை எடுக்க முடியுமா?

EPFO Withdrawal: ஊழியர்கள் பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை பணி ஓய்விற்கு பிறகுதான் எடுக்க வேண்டும் என்றில்லை. அதற்கு முன்னும் தொகையை எடுக்கலாம். 

ஓய்வு பெறுவதற்கு இன்னும் பல வருடங்கள் உள்ள நிலையில் ஊழியர்களுக்கு பணத் தேவை அதிகமாக இருந்து, தங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை அவர்கள் எடுக்க நினைத்தால், சற்றும் யோசிக்காமல், தாமதிக்காமல், சுலபமாக அதை எடுக்கலாம். இந்த பணத்தை எடுத்து மற்ற இடங்களில் முதலீடு செய்யலாம். இதற்கு ஊழியர்கள் சில முக்கியமான விஷயங்களைக் கவனிக்க வேண்டும். பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பதற்கான அந்த முக்கிய வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /8

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தை (EPS) நிர்வகிக்கிறது. இது தனியார் துறையில் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. 

2 /8

EPFO விதிகளின்படி, ஒவ்வொரு மாதமும், ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதம் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. முதலாளியும் / நிர்வாகமும் EPF -க்கு அதே அளவு  தொகையை வழங்குகிறார்கள். முதலாளி / நிர்வாகத்தின் பங்களிப்பிலிருந்து, 8.33 சதவீதம் இபிஎஸ் கணக்கிற்கும், மீதமுள்ள 3.67 சதவீதம் இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.

3 /8

பணி ஓய்விற்கு பிறகு ஊழியர்களுக்கு பணி காலத்தில் சேர்க்கப்பட்ட இந்த பிஎஃப் தொகை மிக உதவியாக இருக்கும். எனினும், ஊழியர்கள் பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை பணி ஓய்விற்கு பிறகுதான் எடுக்க வேண்டும் என்றில்லை. அதற்கு முன்னும் தொகையை எடுக்கலாம்.

4 /8

தேவையின் போது ஊழியர்கள் பிஎஃப் பணத்தை எடுத்து தங்கள் தேவைக்கு பயன்படுத்தலாம், அல்லது மற்ற இடங்களில் டெபாசிட் செய்யலாம். ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பு பிஎஃப் பணத்தை எடுக்க நினைத்தால், அதற்கான வழிகளையும் விதிகளையும் தெரிந்துகொள்வது அவசியமாகும். 

5 /8

ஊழியர் இன்னும் ஓய்வு பெறவில்லை என்றால் அவசர காலங்களில் மட்டுமே பிஎஃப் பணத்தை எடுக்க முடியும். இது தவிர, பின்வரும் சூழ்நிலைகளில் EPFO ​​இல் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தையும் எடுக்கலாம்.

6 /8

சில காரணங்களால் நீங்கள் உங்கள் வேலையை பாதியிலேயே விட்டுவிட நேரிட்டால், அத்தகைய சூழ்நிலையில் உங்கள் EPF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பிஎஃப் தொகையை எடுக்கலாம். இதை நல்ல லாபம் வரும் இடத்தில் மிதலீடு செய்யலாம்.

7 /8

உங்களுக்கு ஒரு மாதத்திற்கு வேலை கிடைக்காவிட்டால், வட்டிப் பணத்தில் 75 சதவிகிதம் வரை எடுக்கலாம். மேலும், இரண்டாவது மாதம் முடிந்த பிறகு, 100% பணத்தை எடுக்கலாம். இந்த தொகையை நீங்கள் உங்கள் அவசர தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

8 /8

ஊழியர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி, திருமணம், வீடு வாங்க / கட்ட, வீடுகளை புதுப்பிக்க, என இப்படிப்பட்ட முக்கிய தேவைகளுக்காக பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம்.