Coconut Oil: தேங்காய் எண்ணெயுடன் இதை கலந்து பயன்படுத்தினால் பொடுகு தொல்லை இனியில்லை!

Coconut Oil For Hair Growth: தலைமுடிகள் வளராமல் இருந்தால் அதற்கு நிவாரணம் எண்ணெய்க் குளியல் என்று சொல்வார்கள். தற்போது பொடுகுத்தொகை மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. முடியை வலுப்படுத்தும்போதே பொடுகு நீங்கினால் நல்லது தானே?

Coconut Oil: தேங்காய் எண்ணெய், பிற எண்ணெய்களை விட சிறந்தது என்று சொல்வதற்கு, அது தலைமுடியை பாதுகாக்கும் பண்புகள் அனைத்தும் கொண்டுள்ளது என்பது மட்டுமே போதுமானது...

1 /7

தேங்காய் எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன, தலையில் பாக்டீரியா வளராமல் தடுக்கும் தேங்காய் எண்ணெயில் உள்ள சத்துக்கள் கூந்தலை வலுவாகவும் அடர்த்தியாகவும் வளர உதவுகிறது

2 /7

அழகையும் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் பொடுகுத்தொல்லையை போக்குவது எப்படி? தலையில் தங்கியிருக்கும் பொடுகை வேர்களில் இருந்து அகற்றலாம். 

3 /7

தேங்காய் எண்ணெயுடன் கலந்து, தலைமுடியின் வேர்களில் இருந்து தேய்த்து குளித்து வந்தால், பொடுகு நீங்கி, முடி வலுவாகவும் அடர்த்தியாகவும் இருக்கும். பொடுகை நீக்க தேங்காய் எண்ணெயை எதை எவ்வாறு சேர்த்து பயன்படுத்துவது என்பதை தெரிந்துக் கொள்வோம்.

4 /7

கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி, முடியிலிருந்து பொடுகை இயற்கையாகவும் நிரந்தரமாகவும் நீக்கலாம். அதற்கு தேங்காய் எண்ணெயுடன் கற்பூரம் கலந்து தடவவும். இரண்டு துண்டு கற்பூரத்தை அரைத்து சூடான தேங்காய் எண்ணெயில் கலக்கவும். இந்த கலவையை உங்கள் தலைமுடியின் வேர்களில் தடவி லேசான கைகளால் மசாஜ் செய்யவும்.ஒரு மணி நேரம் கழித்து, ஷாம்பூவின் உதவியுடன் தலைமுடியைக் கழுவவும்.

5 /7

பொடுகு மற்றும் முடி உதிர்தலுக்கு ரோஸ்மேரி எண்ணெய்யுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்து வரவும்

6 /7

பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபட தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சையை பயன்படுத்தலாம். எலுமிச்சை சாற்றில் சில துளிகள் தேங்காய் எண்ணெயை கலக்கவும். இப்போது இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.சற்று நேரம் கழித்து தலையை அலசவும். பொடுகுத் தொல்லை இனி இல்லை...

7 /7

பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த  பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை