குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகள் மீது குரு பார்வை, கோடீஸ்வர யோகம் ஆரம்பம்

Guru Peyarchi: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இந்த ராசி மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.

குரு பகவான் மிகவும் முக்கியமான, சுபமான கிரகமாக கருதப்படுகிறார். இவர் மே மாதம் பெயர்ச்சி ஆகவுள்ளார். குரு பகவானின் பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்களை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /8

புகழ், வெற்றி, கல்வி, மரியாதை, திறமை, ஆற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக இருப்பவர் குரு பகவான். இவர் சுபமான கிரகமாக கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு சுப ஸ்தானத்தில் இருந்தால், அவர் வாழ்வில் அனைத்து வித மகிழ்ச்சிகளையும் பெறுகிறார்.

2 /8

ஜோதிட கணக்கீடுகளின் படி, மே மாதம் குரு பெயர்ச்சி நடக்கவுள்ளது. அனைத்து பெயர்ச்சிகளிலும் குரு பெயர்ச்சியும் சனி பெயர்ச்சியும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன.  

3 /8

குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதனாம் ஆரோக்கியம், கல்வி, இன்பம் என பல வித நற்பலன்கள் கிடைக்கும். இவர்களது திருமண வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

4 /8

குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு விசேஷ பலன்கள் கிடைக்கவுள்ளன. இந்த காலகட்டத்தில் புதிய பணிகளை துவக்க வாய்ப்பு கிடைக்கும். அப்படி துவக்கப்பட்ட பணிகள் மிக வெற்றிகரமாக நடந்துமுடியும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். போட்டித் தேர்வுகளை எழுதும் மேஷ ராசி மாணவர்கள் வெற்றி காண்பார்கள். குழந்தை வரத்துக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம்  கிடைக்கும்.

5 /8

குரு பகவானின் ராசி மாற்றம் ரிஷப ராசிக்காரர்களுக்கு பல வித நற்பலன்களை அள்ளித் தரும். இவர்களது நிதி நிலை நன்றாக இருக்கும். இத்தனை நாட்களாக இவர்கள் ஆசைப்பட்ட அனைத்து விருப்பங்களும் இப்போது நடக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வணிகத்தில் ஈடுபட்டுள்ள ரிஷப ராசிக்காரர்களுக்கு இப்போது லாபம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வாட்டி வதைத்து வந்த பல பிரச்சனைகள் இப்போது தீர்ந்துவிடும்.

6 /8

கடக ராசியில் உள்ள மாணவர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இப்போது மிகப்பெரிய வெற்றியை பெறுவார்கள். இந்த காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்போது நடந்துமுடியும். நிதிநிலை நன்றாக இருக்கும். முதலீடு செய்ய நினைத்தால் இப்போது செய்யலாம். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

7 /8

குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை காண்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நிதி நிலை நன்றாக இருக்கும். குழப்பங்கள் நீங்கி வாழ்வில் தெளிவு பிறக்கும்.   

8 /8

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.