சனியின் அருளால் நவம்பர் முதல் இந்த ராசிகளுக்கு தலைவிதி மாறும்: வாழ்க்கை ஜொலிக்கும்

Shani Vakra Nivarthi, Impact on Zodiac Signs: சனி பகவான் நீதியின் கடவுளாகக் கருதப்படுகிறார். சனி மக்களுக்கு அவர்களின் செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குகிறார். 

தற்போது சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர நிலையில் உள்ளார். அவர் நவம்பர் 4 வரை இந்த நிலையில் இருப்பார். அதன் பின்னர் அவர் வக்ர நிவர்த்தி அடைவார். சனியின் வக்ர நிவர்த்தியால் அதிகப்படியான பலன்களை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /9

சனி பகவான்: அவர் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாகவும் மிக மெதுவாக நகரும் கிரகமாகவும் இருக்கிறார். ஒவ்வொரு ராசியிலும் அதிக நாட்களுக்கு இருப்பதால் அவர் ராசிகளில் அதிக தாக்கத்தையும் ஏற்படுத்துகிறார்.  

2 /9

நீதியின் கடவுள்: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறர். 

3 /9

சனி வக்ர நிவர்த்தி: தற்போது வக்ர நிலையில் இருக்கும் சனி, நவம்பர் 4 ஆம் தேதி தனது இயக்கத்தை மாற்றி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இது முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. 

4 /9

ராசிகளில் தாக்கம்: சனி வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி பார்க்கலாம். 

5 /9

ரிஷபம்: ரிஷப ராசியினருக்கு சனியின் வக்ர நிவர்த்தி மிகவும் நன்மை பயக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் நேர்மறையான சிந்தனையுடன் முன்னேறுவீர்கள், மேலும் எதிர்காலத்தில் புதிய வேலைகளைப் பற்றியும் சிந்திக்கலாம். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு நவம்பர் முதல் வாரத்திற்கு பிறகு நல்ல செய்தி கிடைக்கும்.

6 /9

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தி அதிர்ஷ்டமாக இருக்கும். மிதுன ராசிக்காரர்களுக்கு நவம்பர் 4ம் தேதிக்குப் பிறகு வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும். நீதிமன்றம் தொடர்பான வழக்குகள் நடந்து கொண்டிருந்தால் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்.  

7 /9

துலாம்: சனியின் வக்ர நிவர்த்தி துலாம் ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். நீண்ட நாட்களாக வேலை தேடிக்கொண்டிருந்த உங்களுக்கு நவம்பர் 4ம் தேதிக்கு பிறகு நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்க அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. பணியிடத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

8 /9

கும்பம்: கும்பம் சனியின் சொந்த ராசியாகும். சனி வக்ர நிவர்த்தி கும்ப ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். உங்கள் வேலைகள் அனைத்தும் முடிவடையும், இது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். 

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.