சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அற்புதமான நேரம்.. வேலை, வியாபாரத்தில் வெற்றி

Sani Vakra Peyarchi: அனைத்து கிரகங்களும் அவ்வப்போது தங்கள் ராசிகளை மாற்றுகின்றன.  இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. 

Sani Vakra Peyarchi: அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக கருதப்படும் சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ளார். அவர் ஜூன் 29 ஆம் தேதி நள்ளிரவு 12:35 மணிக்கு கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவார். சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் அதிகப்படியான வெற்றிகளை பெறுவார்கள். அந்த ராசிகள் பற்றி இங்கே காணலாம். 

1 /8

நீதியின் கடவுளான சனி பகவான் ஜூன் மாத இறுதியில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதனால் அதிகப்படியான நன்மைகளையும், சுப விளைவுகளையும் அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

2 /8

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சியால் தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். அனைத்து திட்டங்களிலும் வெற்றி பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

3 /8

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சியால் நல்ல பலன் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள். வேலை நிமித்தமாக பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். 

4 /8

சிம்மம்: சனி பெயர்ச்ச்சியின் தாக்கத்தால், சிம்ம ராசிக்காரர்களுக்கு வணிகத் துறையில் நல்ல லாபம் கிடைக்கும், இந்த நேரத்தில் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

5 /8

துலாம்: துலாம் ராசிக்காரர்கள் சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் சுப பலன்களை அனுபவிப்பார்கள். ஆன்மீக மற்றும் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களும் வெற்றி பெறலாம். இந்த காலகட்டத்தில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். 

6 /8

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியால் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழுமையான ஆதரவு கிடைக்கும். 

7 /8

கும்பம்: சனி வக்ர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் அதிக நன்மைகளைப் பெறுவார்கள். இந்தக் காலகட்டத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மேலும், உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ப பலன்களைப் பெறலாம். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். 

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.