Beauty Tips: அழகிய நீண்ட கூந்தலை பெற ‘5’ எளிய வழிகள்!

நீளமான அடர்த்தியான கூந்தல் வேண்டும் என்றால், முடி உதிர்தல், பொடுகு, உள்ளிட்ட பிரச்சனைகள் இல்லாமல் இருக்க வேண்டும். அதற்கு ஆரோக்கியமான உணவுகள், சிறந்த கூந்தல் பராமரிப்பும் அவசியம். 

1 /5

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, முடி உதிர்தல் ஏற்படுகிறது, எனவே உங்கள் உணவில் புரதம் மற்றும் வைட்டமின்களை சேர்த்துக் கொண்டால் அடர்த்தியான முடியை பெறலாம்.

2 /5

உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த்தில்,  உடல் கொழுப்பை குறைக்கும் கிரீன் டீ, முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். டீ பேக்குகளை ஹேர் மாஸ்க்காக பயன்படுத்துவதன் மூலமும் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.

3 /5

கூந்தல் வலுவிழக்க பதற்றம் முக்கிய காரணம், எனவே உங்கள் உச்சந்தலையில் தொடர்ந்து எண்ணெய் மசாஜ் செய்வது அவசியம். இவ்வாறு செய்வதன் மூலம் மன அழுத்தம் நீங்கி இரத்த ஓட்டம் சீராகும்.

4 /5

வெங்காயத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு கூறுகள் காணப்படுகின்றன, இது முடியின் வலிமையை அதிகரிக்கிறது. வெங்காயச் சாற்றை முடியின் வேர்களில் தடவுவதன் மூலம், உச்சந்தலைக்கு கெரடின் புரதம் கிடைக்கிறது. இது கூந்தலுக்கு அதிக வலிமையைக் கொடுக்கும்.

5 /5

வெந்தயத்தில் உள்ள புரதம், இரும்புச்சத்து மற்றும் நிகோடினிக் அமிலம் முடியின் வேர்களை பலப்படுத்துகிறது. இதனுடன், வெந்தயத்தில் உள்ள இயற்கை எண்ணெய் முடிக்கு பொலிவைத் தருவதோடு, கூந்தல் உடைந்து போகாமல் பாதுகாக்கிறது.