சனி வக்ர நிவர்த்தி: நவம்பர் முதல் இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்.. முழு ராசிபலன் இதோ

Sani Vakra Nivarthi: சனி பகவான் ஜனவரி 17, 2023 அன்று மாலை 5:47 மணிக்கு கும்ப ராசிக்குள் நுழைந்தார். அதன் பிறகு சனி, ஜூன் 17 அன்று இரவு 10:56 மணிக்கு கும்பத்தில் வக்ர பெயர்ச்சி பெற்றார். 

 

சனி நீண்ட காலமாக வக்ர நிலையில் இருந்த பின்னர், இப்போது 4 நவம்பர் 2023 அன்று கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடைவார். சனி பகவானின் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அற்புதமான நற்பலன்கள் ஏற்படும். இவர்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சி மழையாக பொழியும். அதே நேரத்தில் சிலர் பிரச்சனைகளை சந்திகக் வேண்டி இருக்கும். சனியின் வக்ர நிவர்த்தியால் அனைத்து 12 ராசிகளிலும் ஏற்படவுள்ள தாக்கங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /13

மேஷம்: சனி வக்ர நிவர்த்தியின் தாக்கத்தால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். ஆனால் உங்கள் வருமானத்தை அதிகரிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். சமூகத்தில் உங்கள் மரியாதை கூடும். புதிய வேலைகளை செய்ய நினைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

2 /13

ரிஷபம்: சனி வக்ர நிவர்த்தி காரணமாக உங்கள் தந்தையின் தொழிலில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் அவர்களின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். இது தவிர, உங்கள் வேலை அல்லது பணியிடத்தில் பிஸியாக இருக்க வாய்ப்பு உள்ளது. அனைத்து செயல்களிலும் மிகவும் கவனமாக நடந்துகொள்வது நல்லது. 

3 /13

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தி வேலைகளை விரைவுபடுத்தும். புதிய தொழில் தொடங்க நினைத்திருந்தால், அது இப்போது நடக்கும். கண்டிப்பாக பெரியவர்களின் ஆலோசனையை எடுத்துக் கொள்ளுங்கள், அதிர்ஷ்டம் நிச்சயமாக உங்கள் பக்கம் இருக்கும். நிதி சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.   

4 /13

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தியின் தாக்கத்தால் உடல்நிலை மோசமடையலாம். இது தவிர, கடந்த காலத்திலிருந்த ஏதாவது பயம் உங்களைத் தொந்தரவு செய்யலாம். எனினும், சனி பகவானையும் குல தெய்வத்தையும் வழிபட்டால், அனைத்து சவால்களையும் சமாளித்து வெற்றி காணலாம். 

5 /13

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களே, சனியின் இந்த சஞ்சாரத்தால் உங்கள் திருமண உறவுகள் சிறப்பாக இருக்கும். ஆனால் மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இந்த நேரத்தில், அமைதியாக இருந்து, குளிர்ந்த மனதுடன் வேலை செய்யுங்கள். தொழில் சம்பந்தமாக யோசித்து முடிவெடுப்பது நல்லது. 

6 /13

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சில வேலைகளில் நண்பர்களின் உதவி கிடைக்கும். எதிரிகள் உங்களைத் துன்புறுத்த முயற்சி செய்யலாம். அதை உங்கள் நண்பர்களின் துணைகொண்டு முறியடிப்பீர்கள். கூட்டாண்மையுடன் எந்த ஒரு வேலையைச் செய்தாலும் அதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

7 /13

துலாம்: துலா ராசிக்காரர்கள் சொந்த ஊர் அல்லது நாட்டிற்கு வெளியே உள்ள ஒரு நல்ல கல்லூரியில் சேர்க்கை பெறலாம். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அமைதியாக காலம் கழியும்.

8 /13

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தியின் தாக்கத்தால் தாயாரின் உடல்நிலை சீராகும். புதிதாக நிலம் வாங்க நினைத்தால், சில நாட்கள் காத்திருந்து நிலத்தை வாங்குங்கள். இல்லையெனில் உங்கள் விருப்பம் போல் பலன் இருக்காது. பொருளாதார நிலை சீராக இருக்கும். 

9 /13

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனுகூலமான பலன்களை அள்ளித்தரும். சனியின் இந்த சஞ்சாரத்தால் உங்கள் ஆளுமை உயரும். நம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் சக்தி வாய்ந்தவராக உணருவீர்கள். சகோதர-சகோதரி உறவுகள் வலுவாக இருக்கும். ஆனால் அவர்களுடன் சண்டையிடுவதை முடிந்தவரை தவிர்க்கவும். உங்கள் புகழையும் மரியாதையையும் தக்க வைத்துக் கொள்ள, நீங்கள் நேர்மறையான எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும்

10 /13

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் வருமானம் கூடும். நிதிநிலை நன்றாக இருக்கும். மற்றவர்களிடம் பேசும்போது, ​​தேவைக்கு அதிகமாகப் பேசாதீர்கள், இல்லையெனில் உங்கள் வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம். முக்கியமான முடிவுகளை எடுக்க இது நல்ல நேரமாக இருக்கும். 

11 /13

கும்பம்: சனி வக்ர நிவர்த்தியால் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். படிக்கும் மாணவர்கள் பல தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனினும் இந்தக் காலக்கட்டத்தில் கடின உழைப்பு மூலம் தடைகளை வெல்லலாம். உழைப்புக்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும். 

12 /13

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தியால் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பல நாட்களாக இருந்த கவலையில் இருந்து விடுதலை கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். சனியின் சுப பலன்களை உறுதி செய்ய, பொய் பேசுவதை தவிர்க்கவும்.

13 /13

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.