சிறுநீரக கற்களை போக்க உதவும் 5 வகையான எளிய வீட்டு வைத்தியம்!

உடலில் தண்ணீர் அளவு குறையும் போது சிறுநீரகத்தில் கற்கள் தோன்றி பாதிப்பை ஏற்படுத்தும், நாள்தோறும் போதிய அளவு நீர் குடித்து வர வந்தால் இந்நோயைக் குறைக்கலாம்.

 

1 /5

சிட்ரஸ் வகை பழங்களில் குறிப்பாக எலுமிச்சை பழச்சாறை தினமும் பருகினால் சிறுநீரக கற்கள் உருவாகுவது தடுக்கப்படும்.  மற்ற பழசாறுகளில் கால்சியம் அதிகமாகவும், சிட்ரேட் கம்மியாகவும் இருக்கும், அதனால் எலுமிச்சை சாறு சிறுநீரக கற்களை போக்க உதவும்.  

2 /5

தண்ணீரை போன்றொரு சிறந்த அமிர்தம் வேறெதுவுமில்லை, தினம் 2.7 முதல் 3.7 லிட்டர் வரை தண்ணீர் அருந்தினால் சிறுநீரக கற்கள் உருவாகாது.  கிட்னி செயல்பாட்டிற்கு தண்ணீர் மிகவும் அவசியமான ஒன்றாகும்.  

3 /5

வயிற்றுப்புண், வயிற்றுப்போக்கு போன்றவரை குணமாக்க மாதுளை சாறு உதவுகிறது.  உடலுக்கு பல நன்மைகளை தரும் இது கிட்னியின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது, மாதுளை சாறு அருந்துவது சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.  

4 /5

அருகம்புல் சாறு குடிப்பதால் உடலுக்கு பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது.  இது உடலில் தாங்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுவதோடு, சிறுநீரக கற்கள் உருவாவதையும் தடுக்கிறது.  

5 /5

க்ரீன் டீ குடிப்பது உடலுக்கு பல்வேறு வகைகளில் நன்மைகளை வழங்குகிறது, தற்போது பலரது டயட்டில் க்ரீன் டீ இடம்பெற்றுவிட்டது.  மேலும் க்ரீன் டீ குடிப்பது சிறுநீரக கற்கள் தோன்றும் அபாயத்தை குறைக்கிறது.