டாலர் கனவு படுத்தும் பாடு! அமெரிக்க சட்ட விரோதமாக நுழைய முயன்ற இரு NRI கைது!

அமெரிக்காவில் நுழைய விரும்புவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முறையாக விசா பெற்று அமெரிக்கா செல்வோர் ஒரு புறம் இருக்க, உயிரைப் பணயம் வைத்து சட்டவிரோதமான வழிகளில் அமெரிக்காவுக்குள் நுழைபவர்களும் உள்ளனர். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 3, 2023, 05:51 PM IST
  • முகவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சந்தேகத்திற்கு உரிய படகை சுற்றி வளைத்தனர்.
  • அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் கைது செய்தனர்.
  • இந்திய இளைஞர்கள் அமெரிக்கா செல்லும் முயற்சியை கைவிடவில்லை.
டாலர் கனவு படுத்தும் பாடு! அமெரிக்க சட்ட விரோதமாக நுழைய முயன்ற இரு NRI கைது! title=

அமெரிக்காவில் நுழைய விரும்புவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முறையாக விசா பெற்று அமெரிக்கா செல்வோர் ஒரு புறம் இருக்க, உயிரைப் பணயம் வைத்து சட்டவிரோதமான வழிகளில் அமெரிக்காவுக்குள் நுழைபவர்களும் உள்ளனர். 2022 ஜனவரியில் அமெரிக்க-கனடா எல்லையில் கடுமையான குளிர் காலநிலை காரணமாக நான்கு இந்தியர்கள் உயிரிழந்தது தெரிந்ததே. இந்த சம்பவம், இந்தியர்களுக்கு உள்ள டாலர் கனவுகள் மீதுள்ள மோகத்தை காட்டுகிறது.

இதுபோன்ற பல சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்தாலும், இந்திய இளைஞர்கள் அமெரிக்கா செல்லும் முயற்சியை கைவிடவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. சமீபத்தில், கனடாவிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமாக நுழைய முயன்ற ஐந்து குடியேற்றவாசிகள் அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இரண்டு இந்தியர்களும் உள்ளனர். அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு  பிரிவினர் இவர்களை கைது செய்தனர். புதன்கிழமையன்று அமெரிக்க எல்லைக் காவல் அதிகாரிகள் இந்த ஐவரையும் மிச்சிகன் மாநிலத்தில் அல்கோனாக் அருகே கைது செய்ததாகத் தெரிவித்தது. பிப்ரவரி 20 ஆம் தேதி நள்ளிரவில், தொலைதூர வீடியோ கண்காணிப்பு அமைப்பைக் கண்காணித்த ரோந்து அதிகாரிகள், செயின்ட் கிளேர் ஆற்றில் அடையாளம் தெரியாத கப்பலைக் கண்டறிந்து, பணியாளர்களை எச்சரித்தனர்.

மேலும் படிக்க | India Visa: இந்தியாவுக்கே உலகிலேயே அதிக விசாக்களை கொடுத்து பிரிட்டன் படைத்த சாதனை 

முகவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சந்தேகத்திற்கு உரிய படகை சுற்றி வளைத்தனர். பின்னர், அதில் இருந்த அந்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர். கனடாவில் இருந்து படகு மூலம் எல்லையை கடக்க முயன்றதை ஒப்புக்கொண்டனர். மிகவும் குளிரான வெப்பநிலை காரணமாக புலம்பெயர்ந்த இருவர் முற்றிலும் நனைந்து நடுங்குவதை முகவர்கள் கவனித்தனர். ஆனால் படகில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் ஆற்றில் குதித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் இந்தியர்கள், மற்ற மூவர் நைஜீரியா, மெக்சிகோ மற்றும் டொமினிகன் குடியரசு ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். மேலும் விசாரணைக்காக 5 பேரும் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும் படிக்க | NRI: பிரிட்டனில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News