தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்! மகிந்த ராஜபக்சவிடம் வலியிறுத்திய சம்பந்தன்!

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் கொழும்பு இல்லத்துக்குச் சென்று அவரது நலம் விசாரித்தார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 5, 2023, 02:44 PM IST
  • மூன்று நாள் சர்வகட்சி மாநாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுண கலந்துகொள்ளும்.
  • தமிழ்த் தேசியப் பிரச்சினைகளை முன்வைத்த சம்பந்தன்.
  • தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசு விரைவில் தீர்வு காண வேண்டும்.
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்! மகிந்த ராஜபக்சவிடம் வலியிறுத்திய சம்பந்தன்! title=

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் கொழும்பு இல்லத்துக்குச் சென்று அவரது நலம் விசாரித்தார். அப்போது வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தமிழ்த் தேசியப் பிரச்சினைகளை முன்வைத்த சம்பந்தன், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசு விரைவில் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தேசிய பிரச்சினைகள் குறித்து அதிபர் மற்றும் அரசுடன் கலந்துரையாடி இணக்கமான தீர்வை எட்டுவதற்கு முயற்சிப்பதாக மகிந்த, சம்பந்தனுக்கு உறுதியளித்தார். தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்க விரைவில் நடைபெறவுள்ள மூன்று நாள் சர்வகட்சி மாநாட்டில் தனது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுண கலந்துகொள்ளும் என்றும், அதன் பின்னர் அந்தக் கோரிக்கைகளை தனது கட்சி நேர்மறையான முறையில் ஆய்வு செய்யும் என்றும் மகிந்த கூறினார்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு நாளுக்கு நாள் இடம்பெயர்ந்து வருவது அதிகரித்து வருகிறது.  இலங்கையில் அதிகரித்து வரும் விலைவாசி, உணவு பற்றாக்குறை போன்ற பல காரணங்களால், பலர் தங்களது வாழ வழியின்றி தவித்து வருகின்றனர். இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி, பலர் வாழ வழியின்றி, தங்களை காத்துக் கொள்ளும் வகையில், தமிழகத்திற்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.

மேலும் படிக்க | Economic Crisis: இலங்கையின் பொருளாதார சிக்கல்களுக்கு காரணம்! போட்டுடைத்த அமைச்சர்

முன்னதாக, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாட்டிற்கு 2023 மிகவும் 'முக்கியமான ஆண்டாக' இருக்கும் என்றும், தனது அரசாங்கம் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் என்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

மேலும் படிக்க | 9/11 தாக்குதலுக்கு முன்பாக ஒசாமாவை கொல்லும் திட்டத்தை சொதப்பிய அமெரிக்கா!

மேலும் படிக்க | 9ம் ஆண்டு உலக தமிழ் வம்சாவளி மாநாடு: 2023 ஜனவரி 6 & 7 தேதிகளில் சென்னையில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News