அமீரக மக்களுக்கு முக்கிய செய்தி: இன்று முதல் பெட்ரோல் விலையில் மாற்றம்

UAE Petrol Price: நவம்பர் 1 ஆம் தேதி முதல் சூப்பர் 98 பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.32 திர்ஹமாக இருக்கும். அக்டோபரில் இது 3.03 திர்ஹமாக இருந்தது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 1, 2022, 01:53 PM IST
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்களுக்கு முக்கிய செய்தி.
  • அமீரகத்தில் நவம்பர் மாதத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு கிட்டத்தட்ட 30 ஃபில்ஸ் உயர்ந்துள்ளது.
  • ஐக்கிய அரபு அமீரகத்தில், நவம்பர் மாத விலைகள் இதுவரை 2022 இன் ஆறு மாதங்களில் இருந்ததை விட மலிவாக உள்ளது.
அமீரக மக்களுக்கு முக்கிய செய்தி: இன்று முதல் பெட்ரோல் விலையில் மாற்றம் title=

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்களுக்கு முக்கிய செய்தி. அமீரகத்தில் நவம்பர் மாதத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு கிட்டத்தட்ட 30 ஃபில்ஸ் உயர்ந்துள்ளது. மூன்று மாதக் குறைப்புக்குப் பிறகு இந்த அதிகரிப்பு வருகிறது. இன்று, அதாவது நவம்பர் 1 ஆம் தேதி முதல் சூப்பர் 98 பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.32 திர்ஹமாக இருக்கும். அக்டோபரில் இது 3.03 திர்ஹமாக இருந்தது. ஸ்பெஷல் 95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 3.20 திர்ஹம் ஆகும். அக்டோபரில் இது 2.92 திர்ஹம்களாக இருந்தது. இ-பிளஸ் 91 பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.13 திர்ஹமாகும். இது கடந்த மாதம் ஒரு லிட்டருக்கு 2.85 திர்ஹமாக இருந்தது.

உதாரணத்திற்கு, நீங்கள் செடான் வாகனத்தை ஓட்டுபவராக இருந்தால், கடந்த மாதத்தை விட முழு டேங்க் நிரப்ப 20 திர்ஹம் அதிகமாக செலவாகும். வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் உங்கள் வாகன டேங்கை நிரப்புகிறீர்கள் என்றால், அக்டோபரில் நீங்கள் செலுத்தியதை விட 80 திர்ஹம் அதிகம் செலுத்த வேண்டி இருக்கும்.

நவம்பர் பெட்ரோல் விலை உலக சராசரியான Dh4.74 ஐ விட மிகவும் மலிவானதாக உள்ளது (அக்டோபர் 24 அன்று உலகளாவிய Petrolprices.com இல் புதுப்பிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில்).

ஐக்கிய அரபு அமீரகத்தில், நவம்பர் மாத விலைகள் இதுவரை 2022 இன் ஆறு மாதங்களில் இருந்ததை விட மலிவாக உள்ளது. மேலும் இந்த விலைகள் இந்த ஆண்டு அதிகபட்சமாக இருந்த விலையை விட கிட்டத்தட்ட 30 சதவீதம் மலிவாகும். ஜூலையில் இவற்றின் விலைகள்: சூப்பர் 98 க்கு லிட்டருக்கு 4.63 திர்ஹம்.

மேலும் படிக்க | ஹாங்காங்கின் புதிய விசா திட்டம்: இந்தியர்களுக்கு அதிக பலன் கிடைக்கும் 

ஐக்கிய அரபு அமீரகத்தில் சில்லறை எரிபொருள் விலை அக்டோபர் மாதத்தில் எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது.

ஜூன் மாதம் பெட்ரோல் விலை முதன்முறையாக 4 திர்ஹமைத் தாண்டியது. ஜூலையில், ரஷ்யா-உக்ரைன் மோதலின் பின்னணியில், சூப்பர் 98 லிட்டருக்கு 4.63 திர்ஹம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போது விலைகள் எப்போதும் இல்லாத உச்சத்தை அடைந்தன.

ஐக்கிய அரபு அமீர்கத்தில் எரிபொருள் விலைகள் ஆகஸ்ட் 2015 முதல் சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளுடன் இணைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை எரிபொருள் நுகர்வு குறித்த ஆய்வுக்கும் புரிதலுக்கும் உதவும் என அரசாங்கம் கூறியது.  

ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தில் எரிசக்தி அமைச்சகத்தால் விலைகள் மாற்றியமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் புதிய கட்டணங்களை சில்லறை விற்பனையாளர்கள் மாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | NRI: உகாண்டாவில் பயங்கரம்: இந்திய இளைஞரை சுட்டுக் கொன்ற போலீஸ் கான்ஸ்டபிள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News