இவருக்கு வேலை கொடுங்க பாஸ்... நெட்பிளிக்ஸிடம் நெட்டிசன்கள் பரிந்துரைக்கும் இந்தியர் - என்ன செய்தார்?

Netflix Trailer Video Resume : கனடாவில் நெட்பிளிக்ஸ் மக்கள் தொடர்பு பிரிவில் வேலை வாங்க இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரின் அசத்தலான செயல் நெட்டிசன்களை வாயை பிளக்கச்செய்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 31, 2022, 12:16 PM IST
  • LinkedIn அவர் போட்ட வைரல் வீடியோவுக்கு பலத்த வரவேற்பு.
  • வேலை அளிக்கும்படி நெட்பிளிக்ஸிடம் நெட்டிசன்கள் பரிந்துரை.
இவருக்கு வேலை கொடுங்க பாஸ்... நெட்பிளிக்ஸிடம் நெட்டிசன்கள் பரிந்துரைக்கும் இந்தியர் - என்ன செய்தார்? title=

Netflix Trailer Video Resume : நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் கனடா நாட்டில் மக்கள் தொடர்புக் குழுவில் வேலைக்கு விண்ணப்பித்தபோது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆதித்யஜித் ஷெர்கில் என்பவர் தனித்துவமான ரெஸ்யூம் அனுப்பியுள்ளார். படைபாற்றல் மற்றும் தனித்துவமான அவரின் ரெஸ்யூம் வீடியோ அவருக்கு நெட்பிளிக்ஸில் அந்த வேலையை பெற்றுத் தருமா என இணையவாசிகள் எதிர்பார்த்திருக்கின்றனர். 

அதாவது, நெட்பிளிக்ஸில் வேலை வாங்க நெட்பிளிக்ஸின் டிரைலர்களை பயன்படுத்தியே தனது ரெஸ்யூம் வீடியோவை அவர் வடிவமைத்திருக்கிறார். இதுகுறித்து, ஆதித்யஜித் தனது LinkedIn பக்கத்தில்,"நெட்பிளிக்ஸிற்கு வேலைக்கு விண்ணப்பிக்க சிறந்த வழி? நெட்பிளிக்ஸ் டிரெய்லர்களைப் பயன்படுத்தி நீங்களே ஒரு டிரெய்லரை உருவாக்குங்கள் என்பதுதான். சரி, அதைத்தான் நானும் நினைத்தேன்! நெட்பிளிக்ஸின் கனடா மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் பொறுப்புக்கான வீடியோவை இதோ படமாக்குகிறேன்" என பதிவிட்டிருந்தார். 

மேலும் படிக்க | மீண்டு வாருங்கள் Doge... மீம்ஸ் மன்னனுக்கு உடல்நலக்குறைவு - சீம்ஸ் அனுப்பிய ஆறுதல்!

மேலும், தனது இந்த வீடியோவை லைக் செய்து அதிகம் பகிர வேண்டும் என தனது பாலோயர்களை ஆதித்யஜித் கேட்டுக்கொண்டார். அவரது நெட்ஃபிக்ஸ் ரெஸ்யூம் பதிவு நெட்டிசன்களிடம் இருந்து பெரும் வரவேற்பை பெற்றதம் அவர்களின் பலரையும் ஆதித்யஜித்தின் படைப்பாற்றல் மற்றும் நகைச்சுவையால் ஈர்க்கப்பட்டார்கள்.

இந்த வீடியோவை பார்த்த பிறகு நெட்பிளிக்ஸ் ஆதித்யஜித்தை பணியமர்த்த வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். ஒரு பயனர்,"நன்று! உங்கள் அற்புதமான முயற்சிகள் மற்றும் படைப்பாற்றலை பார்த்த பிறகு Netflix உங்களை வேலைக்கு அமர்த்தும்! நெட்பிளிகஸ் மூலம் உங்கள் கனவுப் உலகத்திற்கு செல்வீர்கள்" என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர்,"நெட்பிளிக்ஸ் இதைப் பார்த்ததா, வேலை கொடுத்தார்களா?" என்று கேள்வியெழுப்பியிருந்தார். 

ஆதித்யஜித் ஷெர்கில் தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.  Canon, Sephora, Tinder, Gap, Burger King, Adani and JSW போன்ற சில பெரிய பிராண்டுகளைக் கையாண்ட இவர், இந்தியாவில் பொது மற்றும் தகவல் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு அவர் OYO உடன் உலகளாவிய பிராண்டின் இணை மேலாளராக பணியாற்றினார். 

மேலும் படிக்க | விஷமாக மாறிய இந்திய இருமல் மருந்து... 18 குழந்தைகள் பலி!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News