அண்ணா: அல்வா கேட்டு சண்முகத்தை அலைய விடும் பரணி.. சனியனுக்கு விழுந்த அடி

Anna Today's Episode Update: அல்வா கேட்டு சண்முகத்தை அலைய விடும் பரணி.. சனியனுக்கு விழுந்த அடி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 13, 2024, 01:44 PM IST
  • அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
  • அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
அண்ணா: அல்வா கேட்டு சண்முகத்தை அலைய விடும் பரணி.. சனியனுக்கு விழுந்த அடி title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா (Anna Serial). இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி சண்முகத்துக்கு 1 வாரம் டைம் கொடுக்க ஷண்முகம் நல்ல புருஷனாக நடந்து கொள்கிறானா என்பதை கண்டுபிடிக்க சனியனும் அவனது மனைவியும் நியமிக்கப்பட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, பரணியும் சண்முகமும் வீட்டிற்கு வர சனியனின் மனைவி அவர்களை நிறுத்தி ரெண்டு பேரும் ஒண்ணா தான் வீட்டுக்குள் போக வேண்டும், ரூல்ஸ்ல அப்படி தான் இருக்கு என்று சொல்கிறார். இதனால் ஷண்முகம் வேறு வழியில்லாமல் கடுப்பாக செல்ல ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்று புதுசா கல்யாணம் ஆனால் என்னவெல்லாம் செய்வார்களோ அதே போல் செய்ய ஷண்முகம் தங்கைகளை பார்த்து முறைக்கிறான். 

அடுத்து பரணி சண்முகத்தை வெறுப்பேற்றி கொண்டே இருக்கிறாள், லவ் டார்ச்சர் செய்து சண்முகத்தை லவ்வர் பாயாக மாற்ற முயற்சி செய்கிறாள். இதனையடுத்து ஷண்முகம் கடைக்கு கிளம்பி செல்கிறான். திரும்பி வரும் போது வெறும் கையோடு வீட்டிற்கு வர சனியன் மல்லிகை பூ எங்கே என்று கேட்கிறான். எப்பவும் இப்படி தான் வருவேன் என்று ஷண்முகம் சொல்ல மல்லி பூவுடன் தான் வரணும், அதான் ரூல்ஸ், இல்லனா இப்பவே பஞ்சாயத்துக்கு தெரியப்படுத்தி விடுவேன் என்று சொல்கிறார். 

மேலும் படிக்க | சந்தியா ராகம் அப்டேட்: சிவராமனை பார்க்க வந்த மாயா.. வெளிவரும் அதிர்ச்சி உண்மைகள், அடுத்து நடக்க போவது என்ன?

இதனால் இன்னும் கடுப்பாகும் ஷண்முகம் சனியனை போட்டு அடிக்கிறான். சனியன் நான் சொல்லல, நோட்ல ரூல்ஸ் இருக்கு என்று அழ ஷண்முகம் மல்லி பூ வாங்கி வர கிளம்பி பரணி எனக்கு அல்வாவும் வேண்டும் என்று சொல்ல கோபத்துடன் வரும் ஷண்முகம் இரண்டையும் வாங்கி கொண்டு வீட்டிற்கு வருகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

அண்ணா: சீரியலை எங்கு பார்ப்பது?

அண்ணா சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | Jailer 2 Update : 'ஜெயிலர் 2' படத்தின் முக்கிய அப்டேட்... இதுதானா டைட்டில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News