Vijay Salary: தளபதி 69 படத்தில் விஜய்யின் சம்பளம் எவ்வளவு? அடடே..இத்தனை கோடியா!

Vijay Salary For Thalapathy 69: நடிகர் விஜய், அடுத்ததாக 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக அவர் வாங்கியுள்ள சம்பளம் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Feb 15, 2024, 08:17 PM IST
  • விஜய் அடுத்து தளபதி 69 படத்தில் நடிக்கிறார்
  • இதன் இயக்குநர் யார் என முடிவாகவில்லை
  • இதற்காக அவர் வாங்கியுள்ள சம்பளம் எவ்வளவு?
Vijay Salary: தளபதி 69 படத்தில் விஜய்யின் சம்பளம் எவ்வளவு? அடடே..இத்தனை கோடியா! title=

Vijay Salary For Thalapathy 69: ரசிகர்களால் ‘தளபதி’ என்று அழைக்கபடுபவர், நடிகர் விஜய். இவர், அரசியலில் களமிறங்க உள்ளதை ஒட்டி, தான் கமிட் ஆகியுள்ள படத்தில் நடித்து கொடுத்து விட்டு முழு நேர அரசியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் கடைசி படத்திற்கு வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 

GOAT திரைப்படம்:

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இது, அவரது 68வது படமாகும். இந்த படத்தில் மீனாட்சி செளத்ரி, லைலா, சினேகா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அஜ்மல், மைக் மோகன், பிரசாந்த், பிரபு தேவா உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம், சையின்ஸ் ஃபிக்ஷன் பாணியில் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | விடாமுயற்சி படத்தின் ஆக்ஷன் காட்சி லீக்.. வைரலாகும் புகைப்படங்கள்

தளபதி 69:

நடிகர் விஜய், விரைவில் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். அதற்கு முன்னர் தான் நடித்துள்ள படங்களில் நடித்து கொடுத்து விடுவார். அந்த வகையில், நடிகர் விஜய் கடைசியாக தனது 69வது படத்தில் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை RRR படத்தை தயாரித்து டிவிவி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படத்தை முதலில் கார்த்திக் சுப்பராஜ் இயக்குவதாக கூறப்பட்டது. அதன் பிறகு, வெற்றிமாறன் படத்தை இயக்குவதாக பேசப்பட்டது. இப்போது வரை யார் இப்படத்தின் இயக்குநர் என்பது தெரியவில்லை. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வாங்கிய சம்பளம்..

நடிகர் விஜய், கடந்த சில ஆண்டுகளாகவே பல கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். தளபதி 69 படத்திற்காக இவர் 200 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் அவர் நடித்த வாரிசு படத்திற்காக ரூ.150 கோடி சம்பளமாக வாங்கியதாகவும், இதையடுத்து நடித்த லியோ படத்திற்காக 175 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாகவும், அடுத்து நடித்து கொண்டிருக்கும் காேட் படத்திற்காக 180 கோடிக்கும் மேல் சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் நடிக்கும் தளபதி 69 படத்திற்காக தனது சம்பளத்தை பல மடங்காக உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

முழு நேர அரசியலில் இறங்கும் விஜய்..

நடிகர் விஜய், இதுவரை தனது படங்களிலும் பட விழாக்களிலும் மட்டுமே அரசியல் பஞ்ச் வசனங்களை பேசி வந்தார். அப்போதே ரசிகர்களுக்கு விஜய்க்கு அரசியல் ஆர்வம் இருக்குமோ என்ற டவுட் எழுந்தது. அதை உறுதி செய்யும் வகையில் இருந்தது, லியோ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய்யின் பேச்சு. இதையடுத்து, இம்மாதம் 2ஆம் தேதி “தமிழக வெற்றி கழகம்” எனும் அரசியல் கட்சியை தொடங்கினார் விஜய். 

இது குறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாகவும், அரசியலுக்கு சென்ற பிறகு படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார். 

மேலும் படிக்க | Vettaiyan: ‘வேட்டையன்’ படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியானது தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News