மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாற்றில் நடிகை டாப்சி!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாற்றில் நடிகை டாப்சி பன்னு நடிக்க உள்ளார்.

Last Updated : Dec 4, 2019, 02:15 PM IST
மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாற்றில் நடிகை டாப்சி! title=

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாற்றில் நடிகை டாப்சி பன்னு நடிக்க உள்ளார்.

ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமான டாப்சி, இந்தியில் பிங்க், நாம் ஷபானா, முல்க், பத்லா  உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவர் தற்போது மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில் நேற்று மிதாலி ராஜின் பிறந்தநாளை கொண்டாடிய டாப்சி, புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு "சபாஷ் மிது" என்று பெயரிடப்பட்டுள்ளது. "சபாஷ் மிது"வை வியாகாம் 18 ஸ்டுடியோஸ்  தயாரிக்கிறது. ரெய்ஸ் ஹெல்மர் ராகுல் தோலாகியா இயக்குகிறார்.

Trending News