Bigg Boss 6 Fame GP Muthu: 'சன்னி லியோன் என்னை பார்த்து க்யூட்-னு சொன்னாங்க' - வெட்கப்பட்ட ஜி.பி. முத்து

நடிகை சன்னி லியோனுடன் படம் நடித்தது சிறப்பான அனுபவம் எனவும் அவர் தன்னை பார்த்து க்யூட் எனக் கூறியபோது சிலிர்த்து போனேன் என டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Nov 7, 2022, 06:09 PM IST
  • ஜிபி முத்து சமீபத்தில் பிக்பாஸ் தொடரில் பங்கேற்று, சில நாள்களிலேயே வெளியேறினார்.
  • தற்போது ஐந்து படங்களில் நடித்து வருவதாக ஜிபி முத்து தெரிவித்தார்.
  • தன்னால் தனது ஊரான உடன்குடி பிரபலமடைந்ததாகவும் கூறினார்.
Bigg Boss 6 Fame GP Muthu: 'சன்னி லியோன் என்னை பார்த்து க்யூட்-னு சொன்னாங்க' - வெட்கப்பட்ட ஜி.பி. முத்து  title=

கோவையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து இன்று பங்கேற்றார். அப்போது, 'ஜி தமிழ் நியூஸ்' ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், "டிக் டாக் மூலம் அறிமுகமாகி ஊடகங்களின் துணையுடன் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறேன். எனக்கு வரும் கடிதங்கள் குறித்து வீடியோ போட்டதுதான் எனக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. 

திரைத்துறையில் எனக்கு சிறந்த ஒத்துழைப்பை தருகின்றனர். பிக்பாஸ் தொடரில் பங்கேற்ற அனுபவம் சிறப்பாக இருந்தது. பிக்பாஸ் மூலம் நடிகர் கமல்ஹாசனை சந்தித்தது மிகப்பெரும் பாக்கியம். 

தனது குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் பிக்பாஸை விட்டு வெளியேறினேன். தற்போது ஐந்து திரைப்படங்களில் நடித்து வருகிறேன். நடிகை சன்னி லியோனுடன் திரைப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி. நான் அவரைப் பார்த்து 'ஐ லவ் யூ' கூறியவுடன், அவர் என்னை பார்த்து 'கியூட்' என கூறிய போது சிலாகித்து போனேன்" என்றார். 

GP Muthu

மேலும் படிக்க | பிக்பாஸ் வீட்டில் ஜி.பி.முத்து வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கோவையில் யூ-ட்யூபர் டிடிஎஃப் வாசன்  உடன் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றது குறித்த கேள்விக்கு, "இதுவரை தான் யாருடனும் அதுபோன்ற வேகத்தில் சென்றதில்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு இனிமேல் யாருடனும் செல்ல மாட்டேன்" எனவும்  கூறினார். மேலும், கருப்பட்டிக்கு எனது ஊர் பிரபலமானது என்றும், தற்போது ஜி.பி. முத்து என்ற தன் பெயரால் தனது ஊர் பிரபலமாகியுள்ளது என்றும் கூறினார். 

'ஓ மை கோஸ்ட்' என்ற பெயரில்  தமிழில் தயாராகும் திரைப்படத்தில் நடிகை சன்னி லியோன் நடித்துள்ளார்.  இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, சதீஷ்,  நடிகை தர்ஷா குப்தா, சஞ்சனா, தங்கதுரை, திலக் ரமேஷ் ஆகியோருடன் ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

சமீபத்தில், இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க சன்னி லியோன் சென்னை வந்திருந்தார். அப்போது, சன்னி லியோனை இந்த திரைப்படத்திற்கு முன் யார் என்றே தெரியாது என ஜி.பி.முத்து கூறியிருந்தது வைராலனது.

மேலும் படிக்க | சன்னிலியோனா அவங்க யாரு?... ஜிபி முத்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News