பாலியல் புகாரில் சிக்கிய சமந்தாவின் ‘ஊ சொல்றியா மாமா’ டான்ஸ் மாஸ்டர்

அண்மையில் ஹிட் அடித்த ‘ஊ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு நடன இயக்கம் செய்த கணேஷ் ஆச்சார்யா பாலியல் புகாரில் சிக்கியுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 1, 2022, 06:31 PM IST
  • ஊ சொல்றியா மாமா பாடல் நடன இயக்குநர் மீது பாலியல் புகார்
  • மும்பை காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது
  • பாலியல் புகாரை திட்டவட்டமாக மறுத்துள்ளார் கணேஷ் ஆச்சார்யா
பாலியல் புகாரில் சிக்கிய சமந்தாவின் ‘ஊ சொல்றியா மாமா’ டான்ஸ் மாஸ்டர் title=

தெலுங்கில் அண்மையில் ரிலீஸான திரைப்படம் ’புஷ்பா தி ரைஸ்’. அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனில் பெரும் வசூலை ஈட்டியது. தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் ரிலீஸ் செய்யப்பட்ட புஷ்பா தி ரைஸ் திரைப்பம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற ’ஊ சொல்றியா மாமா’ என்ற குத்துப் பாடல் இந்தியா முழுவதும் ஹிட் அடித்தது. படம் ரிலீஸாவதற்கு முன்பே வெளியிடப்பட்ட இப்பாடல் பட்டி தொட்டியெங்கும் படத்துக்கான நெருப்பை பற்ற வைத்தது. 

மேலும் படிக்க | வெளியாவதற்கு முன்பே சாதனைகளை அடித்து நொறுக்கும் கேஜிஎப்2

காரணம் இப்பாடலில் முதன்முறையாக நடிகை சமந்தா குத்து பாடலுக்கு நடனமாடியிருந்தார். இதுவரை ஹீரோயினாக நடித்து வந்த சமந்தா, திடீரென கவர்ச்சியில் குத்து பாடலுக்கு நடனமாடியது ரசிகர்களை வியக்க வைத்தது. இப்பாடலுக்கு நடனமாடியது குறித்து ஒரு பேட்டியில் பேசும்போது, இதுவரை நடித்த படங்களை விட ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் தனக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இப்பாடலுக்கு நடன இயக்கம் செய்த நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா பாலியல் புகார் ஒன்றில் சிக்கியுள்ளார். 2020 ஆம் ஆண்டு கணேஷ் ஆச்சார்யா மீது மும்பை காவல்துறையில் பாலியல் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. 

அதில் அவருடன் உதவி நடன இயக்குநராக பணியாற்றிவருக்கு கணேஷ் ஆச்சார்யா பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை காவல்துறை, கணேஷ் ஆச்சார்யா மீது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டுகளை நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா திட்டவட்டமாக மறுத்துள்ளார். தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் இதுபோன்ற புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், பாலியல் புகாரில் எந்தவித உண்மையும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் புகார் கொடுத்த 35 வயதான புகார்தாரர் பாலியல் புகார் கொடுக்கப்பட்ட பிறகு கணேஷ் ஆச்சார்யா தரப்பில் இருந்து தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.  திரைத்துறையில் தான் வெற்றிபெற விரும்பினால், ஆசைகளுக்கு அடி பணியவேண்டும் என கணேஷ் ஆச்சார்யா மிரட்டியதாகவும் புகார்தாரர் கூறியுள்ளார். 

மேலும் படிக்க | அஜித் தன் கைப்பட எழுதிய கடிதம்! யாருக்காக தெரியுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News