மாலத்தீவு கடற்கரையில் ஜாலியாக உலா வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். சமீபத்தில் தான் இவர் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 18, 2023, 11:21 AM IST
  • இரண்டு படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
  • ரஜினிகாந்த் மாலத்தீவு கடற்கரையில் இருக்கும் புகைப்படம் வைரல்.
  • சூப்பர் ஸ்டார் மொய்தீன் பாய் என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்துள்ளார்.
மாலத்தீவு கடற்கரையில் ஜாலியாக உலா வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் title=

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய படமான லால் சலாம் படப்பிடிப்பை முடித்தவிட்டு கடந்த வாரம் மாலத்தீவுக்கு புறப்பட்டார். தற்போது ரஜினிகாந்த் சாதாரண டி-ஷர்ட் மற்றும் ஷார்ட்ஸில் காலணியில்லாமல் கடற்கரையில் நடந்து செல்லும் புதிய படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

மாலத்தீவு கடற்கரையில் சூப்பர்ஸ்டார் ரஜினி
ரஜினிகாந்த் கடந்த வாரம் மாலத்தீவுக்கு புறப்பட்டார். இதற்கு அவர் சென்னைலியிலிருந்து மாலத்தீவு தலைநகர் மாலே-க்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றார். இது குறித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்த அந்த நிறுவனம், “ நட்சத்திர நடிகர் ரஜினிகாந்த் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் சென்னையில் இருந்து மாலே வரை ஒரு அழகான பயணத்தை மேற்கொண்டார். வழி முழுக்க அழகான நினைவுகள் உருவாகின. எங்களுடன் பறந்ததற்கு நன்றி, நீங்கள் எங்கள் விமானத்தில் பறந்ததை மரியாதையாக கருதுகிறோம்” என்று பதிவிட்டு இருந்தனர்.

மேலும் படிக்க | மாஸ் வசூல் வேட்டை நடத்தும் சிவகார்த்திகேயனின் மாவீரன்.. இதுவரை எவ்வளவு வசூல்?

இரண்டு படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 
இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ’ஜெயிலர்’ மற்றும் ’லால் சலாம்’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பை முடித்தார். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. ஜெயிலர் படத்தின் முதல் பாடல் கடந்த வாரம் வெளியான நிலையில், செகண்ட் சிங்கிள் நேற்று ரிலீஸானது. இன்னொரு பக்கம் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விதார்த் இருவரும் லீடிங் ரோலில் நடிக்க, சூப்பர் ஸ்டார் மொய்தீன் பாய் என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்துள்ளார். இது கேமியோ ரோல் தான் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விதார்த் இருவரும் லீடிங் ரோலில் நடிக்க, சூப்பர் ஸ்டார் மொய்தீன் பாய் என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்துள்ளார். இது கேமியோ ரோல் தான் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு அடுத்ததாக ரஜினிகாந்த் ஜெய்பீம் புகழ் இயக்குநர் ஞானவேலுடன் இணைய இருக்கிறார். அதற்கான வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடற்கரை போட்டோ வைரல்
இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் மாலத்தீவு கடற்கரையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. சிவப்பு டி-சர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து ரஜினிகாந்த் கூலாக கடற்கரையில் வலம் வந்திருக்கிறார். வைரலாகும் போட்டோ இதோ..

மேலும் படிக்க | செவாலியே அருணா சாய்ராம்! கர்நாடக இசைப் பாடகியின் மகுடத்தில் மற்றுமொரு மயிலிறகு

Trending News