ஏ.ஆர்.ரஹ்மானின் இளையமகள் செய்த சாதனை! இசைத்துறையில் அல்ல-‘இந்த’ விஷயத்தில்!

AR Rahman Daughter Raheema Rahman : நடிகர் ஏ.ஆர்.ரகுமானின் இளைய மகள், புதிதாக ஒரு சாதனையை செய்திருக்கிறார். இது குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பெருமையுடன் பதிவிட்டிருக்கிறார்.   

Written by - Yuvashree | Last Updated : May 19, 2024, 12:57 PM IST
  • ஏ.ஆர்.ரஹ்மானின் இளைய மகள்
  • புதிய சாதனை செய்தார்
  • என்ன சாதனை தெரியுமா?
ஏ.ஆர்.ரஹ்மானின் இளையமகள் செய்த சாதனை! இசைத்துறையில் அல்ல-‘இந்த’ விஷயத்தில்! title=

AR Rahman Daughter Raheema Rahman : இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர், ஏ.ஆர்.ரஹ்மான். இசைக்குடும்பத்தில் இருந்து வந்ததாலும் இசை மீது ஆர்வம் மிகுதியாக இருந்ததாலும் இவர் இசையமைப்பாளராக மாறினார். ஆனால், இவரது மகள் ஒருவர் இசை பக்கமே வரவில்லை. அதற்கு பதில், வேறு ஒரு துறையில் சாதித்திருக்கிறார். 

ஏ.ஆர்.ரஹ்மானின் 2 மகள்கள்:

ஏ.ஆர்.ரஹ்மான், கிட்டத்தட்ட 32 வருடங்களுக்கும் மேலாக முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார். தமிழில் ‘ரோஜா’ படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து பாலிவுட், மாலிவுட், கோலிவுட் என பல துறை சேர்ந்த படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவருக்கு 1995ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

இசைத்துறையில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் இரு பிள்ளைகள்!

சாய்ரா பானு-ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, கத்தீஜா ரஹ்மான், ரஹீமா ரஹ்மான், மகள்கள் இருக்கின்றனர். ஏ.ஆர்.அமீன் என்ற ஒரு மகனும் இருக்கிறார். இதில், மூத்த மகள் கத்தீஜா ரஹ்மானுக்கு தற்போது 28 வயதாகிறது. இவர், பொன்னியின் செல்வன் படத்தில் தனது தந்தையுடன் இணைந்து பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். தனியாகவும் பாடல்களுக்கு இசையமைத்து கொண்டிருக்கிறார். 

இதே போல, ரஹ்மானின் இளைய மகன் ஏ.ஆர்.அமீனும் பல படங்களில் பாடல் பாடியிருக்கிறார். இதில், ஏ.ஆர்.ரஹ்மானின் நடு மகள் ரஹீமா ரஹ்மான் புதிதாக ஒரு துறையில் சாதித்திருக்கிறார். 

மேலும் படிக்க | CWC 5: குக் வித் கோமாளி 5-ல் முதல் எலிமினேஷன்! யார் தெரியுமா?

ரஹீமா சாதித்த துறை!

ரஹீமா, சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில் இளநிலை படிப்பை முடித்தார். இதையடுத்து, அவர் வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறார். ரஹீமா, துபாயில் இருக்கும் ஒரு பிரபல நட்சத்திர கல்லூரியில் சமையல் கலை பயின்றிருக்கிறார். தற்போது அவர் அந்த கலையில் பட்டதாரி பட்டம் பெற்றிருக்கிறார். இந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், பெருமையுடன் உண்ர்வதாக குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது, இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ARR (@arrahman)

இசைத்துறை அல்லாது..

ஏ.ஆர்.ரஹ்மானின், பிள்ளைகள் மட்டுமல்லாது அவரது உறவினர்கள் அனைவருமே இசைத்துறையில் இருக்கின்றனர். அப்படி, இசைத்துறையில் இல்லையென்றால் கூட, துரைத்துறையில் ஏதேனும் முக்கியமான இடத்தில் இருக்கின்றனர். ஆனால், அவரது இளைய மகள் மட்டும் வேறு துறையில் சாதித்திருக்கிறார். இதைப்பற்றி ரசிகர்கள் அதிகமாக பேசி வருகின்றனர். 

மேலும் படிக்க | இந்தியன் 2 பட அப்டேட்டுகளை அள்ளி வீசிய நடிகர் கமல்! CSK vs RCB லைவில் சுவாரஸ்யம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News