அண்ணா சீரியல்: சண்முகத்தை தோற்கடிக்க பெண்ணை களம் இறக்கும் சௌந்தரபாண்டி..!!

Anna Zee Tamil Serial Today's Episode Update:சண்முகத்தை தோற்கடிக்க பெண்ணை களம் இறக்கும் சௌந்தரபாண்டி.. ஜெயிக்கப் போவது யார்? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 2, 2024, 03:03 PM IST
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் அண்ணா.
  • அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
  • அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
அண்ணா சீரியல்: சண்முகத்தை தோற்கடிக்க பெண்ணை களம் இறக்கும் சௌந்தரபாண்டி..!! title=

Anna Zee Tamil Serial Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா‌. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி தன்னுடைய பிறந்தநாளில் சிலம்பம் போட்டி வைத்து அதற்கு தலைமை தாங்கி 5 லட்சம் ரூபாய் பரிசு தொகை கொடுக்க முடிவெடுக்க சண்முகம் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்த திட்டமிட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் அண்ணா சீரியலில் (Anna Serial), இன்று அதாவது சௌந்தரபாண்டி பஞ்சாயத்தை கூட்டி செலவும் போட்டி நடத்தப் போவதை பற்றி சொல்லிக் கொண்டிருக்க அங்கு வரும் சண்முகம் பரிசு தொகையை யார் மூலமாக கொடுக்கப் போறீங்க என்று கேட்க கோபப்படும் சௌந்தரபாண்டி ஒரு கட்டத்தில் எம்எல்ஏ மூலமாகத்தான் கொடுக்கப் போவதாக சொன்ன சரி பணத்தை எண்ணி சரியா வையுங்கள் கள்ள நோட்டு இல்லாமல் நல்ல நோட்டா வையுங்க, ஜெயிக்க போறது நான்தான் என்று சொல்கிறான். 

இதை கேட்ட சௌந்தரபாண்டி சண்முகத்துடன் வாக்குவாதம் செய்ய வைகுண்டம் சௌந்தரபாண்டியன் சட்டையை பிடிக்க பிரச்சனை பரபரப்பாகிறது. வைகுண்டம் நீ இந்த போட்டியில் கண்டிப்பா ஜெயிக்கணும் உன் அம்மாவைப் பத்தி தப்பா பேசணும்னு வாயடைக்க வைக்கணும் இல்லன்னா உன்னை கொன்னு போட்டு விடுவேன் என்று சண்முகத்துடன் சொல்லி விட்டு வருகிறார். 

வீட்டில் சொன்னது ஒரு பக்கம் ஃபேக்டரி செய்து கொண்டிருக்கிற மறுபக்கம் சௌந்தரபாண்டியன் சண்முகத்தை ஜெயிக்க விடக்கூடாது என புலம்பிக் கொண்டிருக்க பாக்கியமும் இசக்கியும் சண்முகம் தான் ஜெயிப்பான் என்று சொல்கின்றனர். 

மேலும் படிக்க | ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்! ஹீராேவாக நடிக்க இருப்பது யார்?

இதனால் சௌந்தரபாண்டி இந்த சிலம்பாட்டத்தை பெண்கள் சிலம்பாட்டமாக மாற்ற ஒரு பெண்ணை வந்து சந்தித்து போட்டிக்கு கூப்பிட அவரும் வருவதாக வாக்கு கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

அண்ணா: சீரியலை எங்கு பார்ப்பது?

அண்ணா சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | சின்னத்திரையில் களமிறங்கும் வடிவேலு!? எந்த நிகழ்ச்சி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News