கார்த்திகை தீபம் அப்டேட்: கார்த்திக் தீபாவின் கல்யாண கொண்டாட்டத்தில் ரம்யா.. உண்மை உடையும் நேரத்தில் வந்த ட்விஸ்ட்

Karthigai Deepam Episode Update: தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 18, 2024, 03:09 PM IST
  • கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்.
  • ரம்யாவை கோவிலில் சந்திக்கும் தீபா.
  • பதறியடித்து கிளம்பும் ரம்யா.
கார்த்திகை தீபம் அப்டேட்: கார்த்திக் தீபாவின் கல்யாண கொண்டாட்டத்தில் ரம்யா.. உண்மை உடையும் நேரத்தில் வந்த ட்விஸ்ட் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்.

கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா கார்த்திக் காதலுக்கு ஓகே சொல்வது போல் ரம்யாவுக்கு லெட்டரை கொடுத்து அனுப்பிய நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, அந்த லெட்டரில் ஐ லவ் யூ டூ எனவும் ஆனால் இப்போதைக்கு நம்முடைய காதல் வெளியில் தெரிய வேண்டாம், எனக்கு சில குடும்ப பிரச்சனைகள் இருப்பதாகவும் அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும் என்பது போலவும் எழுதி இருக்கிறது. காரத்திக் காதலை ஏற்று கொண்ட சந்தோஷத்தில் ரம்யா இருக்கிறாள். 

மறுபக்கம் அபிராமி கார்த்திக், தீபா கல்யாணத்தில் நான் எதுவுமே பண்ணல, அவங்களுடைய கல்யாண நாளையாவது சிறப்பா கொண்டாடணும்னு நினைப்பதாக சொல்ல அருணாச்சலம் இந்த வீட்டோட அடுத்த நாச்சியார் தீபா தான். நீ கல்யாணமாகி வந்த புதுசுல எப்படி இருந்தாயோ அதே மாதிரி தான் அவளும் இருக்கா என்று சொல்கிறார். 

ரம்யாவை கோவிலில் சந்திக்கும் தீபா

இதையடுத்து ரம்யா தீபாவை கோவிலில் சந்தித்து அவர் என்னுடைய காதலுக்கு ஓகே சொல்லி விட்டதாக சொல்ல வாழ்த்து சொல்லும் தீபா அப்பா கிட்ட சொல்ல வேண்டியது தானே என்று சொல்ல அவர் கிட்டா சொன்னா உடனே கல்யாணம்னு சொல்லுவார். ஆனால் அது இப்போ முடியாது என்று சொல்கிறாள். இங்கே நடப்பது அனைத்தையும் ஒட்டு கேட்கும் ஐஸ்வர்யா ரியாவுடன் கூட்டு சேர்ந்து ரம்யாவை வைத்து கேம் விளையாட பிளான் போடுகிறாள். 

மேலும் படிக்க | சித்தார்த்தின் 40வது படத்தை இயக்கப்போவது யார்? வெளியான மாஸ் அப்டேட்!

இதையடுத்து ரம்யாவின் அப்பாவிடம் தீபா ரம்யாவின் காதல் குறித்து சொல்ல அவர் எம்பிளாயியா என்று முதலில் ஷாக் ஆனாலும் ரம்யா எல்லாத்தையும் யோசித்து சரியா தான் முடிவு எடுத்திருப்பா என்று சம்மதம் சொல்கிறார். மறுபக்கம் அபிராமி கார்த்திக் தீபா கல்யாண நாளை பெருசா கொண்டாட போறதா வீட்டில் உள்ளவர்களிடம் சொல்கிறாள். 

பதறியடித்து கிளம்பும் ரம்யா

அடுத்த நாள் அதற்கான ஏற்பாடுகள் நடக்க ரம்யா இவர்களது கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு வருகை தருகிறாள். கார்த்திக் ரூமில் ரெடியாகி கொண்டிருக்க ரம்யா அவனை பார்த்து விடுவாளா என்ற பில்டப் எகிற கார்த்திக் கீழே இறங்கி வரும் சமயத்தில் ரம்யாவுக்கு ஒருவனை வைத்து போன் செய்து அப்பாவுக்கு உடம்பு முடியல, ஹாஸ்பிடலில் இருப்பதாக பேச வைக்கிறாள், இதனால் ரம்யா பதறியடித்து கிளம்பி விடுகிறாள். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?

கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | ACE என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News