கமல், சூர்யா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அர்ஜுன் தாஸ்

கமல் மற்றும் சூர்யா ரசிகர்களிடம் விக்ரம் படத்தில் நடித்த அர்ஜுன் தாஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 6, 2022, 04:23 PM IST
  • விக்ரம் படம் 150 கோடி ரூபாய் வசூல்
  • கமல், சூர்யா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அர்ஜுன் தாஸ்
கமல், சூர்யா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அர்ஜுன் தாஸ் title=

மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை இயக்கினார். கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில்,சூர்யா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். 

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படம் கடந்த 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள், லோகேஷ் கனகராஜ் கமல் ஹாசனின் ரசிகன் என்பதை நிரூபித்துவிட்டார். தனக்கு பிடித்த நாயகனை திரையில் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார் என புகழ்கின்றனர். 

Kamal, Lokesh Kanagaraj

விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதுவரை விக்ரம் படம் 150 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், வேற்று மொழி படங்கள் வெற்றி பெற்று தமிழ் படங்கள் சரியாக ஓடாமல் இருந்த நிலையை விக்ரம் மாற்றி வைத்திருப்பதால் லோகேஷ் கனகராஜுக்கு பலர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

மேலும் படிக்க | விக்ரம் படத்தில் நடித்ததற்கு சூர்யா பெற்ற சம்பளம்!

இந்நிலையில் கைதி படத்தின் மூலம் பிரபலமாகி தற்போது விக்ரம் படத்திலும் நடித்திருக்கும் நடிகர் அர்ஜுன் தாஸ் கமல் ஹாசன் மற்றும் சூர்யாவின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

Arjundas

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “மச்சி, ஒரு சீன் என்று லோகேஷ் கனகராஜ் அழைக்கும்போது, எந்த கேள்வியும் கேட்கமாட்டோம். சரியென்று செல்வோம். ஆனால் அந்த ஒரு காட்சியில் ஒரு பக்கம் கமல் சார், மறுபக்கம் சூர்யா சார். என்ன செய்ய முடியும்?. 

நாம் கொண்டாடி தீர்க்கின்ற இரண்டு நடிகர்கள் நம் கண் முன்பு நிற்கும்போது அவர்களை பார்க்கத்தான் தோன்றும். மானிட்டரில் அவர்களை மீண்டும் மீண்டும் பார்த்ததுதான் என் வாழ்வின் சிறந்த அனுபவம். இதைவிட வேறு என்ன எனக்கு வேண்டும். எனக்கு பிடித்த 3 பேர், கமல் சார், சூர்யா சார் மற்றும் லோகேஷுடன் வேலை செய்துள்ளேன்.

 

கமல் ஹாசனை பார்க்க சாம்கோவுக்கு வெளியே காத்திருந்தது போய் இன்று அவர் படத்தில் நடித்ததன் மூலம் என் கனவு நனவாகிவிட்டது. இந்த வாய்ப்புக்கு நன்றி. நன்றி சூர்யா சார். உங்களுடன் சேர்ந்து நடித்தது எனக்கு கிடைத்த கௌரவம்.

மேலும் படிக்க | நீங்க பேசுறதுக்கு ஆதாரம் இருக்கா?... அவதூறு பரப்பிய பயில்வான் ரங்கநாதனை கிழித்து தொங்கவிட்ட பாடகி

நான் விக்ரம் படத்தில் நடித்திருக்கிறேன் என்கிற தகவல் வெளியானதும் கமல் சார் மற்றும் சூர்யா சாருடன் சேர்ந்து நடித்த அனுபவம் பற்றி  ரசிகர்களாகிய நீங்கள் கேட்டீர்கள். ஆனால் அப்பொழுது என்னால் அதுகுறித்து சொல்ல முடியவில்லை.

அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இப்போது கேட்டால் அது லைஃப்டைம் செட்டில்மென்ட் என்றே சொல்வேன்” என குறிப்பிட்டிருக்கிறார். தற்போது அர்ஜுன் தாஸின் இந்த ட்வீட்டை ரசிகர்கள் பலர் பகிர்ந்துவருகின்றனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News