Aranmanai 4 : பண வேட்டை ஆடும் அரண்மனை 4.. கோடிகளை தாண்டும் வசூல்

Aranmanai 4 box office collection day 2: அரண்மனை 4 படத்தில் சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப் மற்றும் பலர் நடித்து உள்ளனர். தற்போது இந்த படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 5, 2024, 10:43 AM IST
  • சமீபத்தில் இயக்கியிருக்கும் படம்தான், அரண்மனை 4.
  • அரண்மனை படத்தின் முதல் பாகம் 2014ஆம் ஆண்டு வெளியானது.
  • அரண்மனை 4 படம் இரண்டு நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது.
Aranmanai 4 : பண வேட்டை ஆடும் அரண்மனை 4.. கோடிகளை தாண்டும் வசூல் title=

Aranmanai 4 box office collection day 2: தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர், சுந்தர்.சி. கமர்ஷியல்-காமெடி படங்களுக்கு பெயர் பெற்ற இவர், பேய் படங்களையும் இயக்கி வருகிறார். அந்த வகையில் அவர் சமீபத்தில் இயக்கியிருக்கும் படம்தான், அரண்மனை 4. 

அரண்மனை படத்தின் முதல் பாகம் 2014 ஆம் ஆண்டு வெளியானது. முதல் பாகம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அரண்மனை படத்தை ஒரு சீரீஸ் ஆகவே எடுக்க ஆரம்பித்து விட்டார் சுந்தர்.சி. ஒரு பெரிய பங்களா, அதில் வந்து தங்கும் பெரிய குடும்பத்தினர், அவர்களை கொல்ல நினைக்கும் பேய், இந்த டெம்ப்ளேட்தான் வழக்கமாக அரண்மனை படங்களின் கதையின் டெம்ப்ளேட்டாக இருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு, அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் வெளியான நிலையில், இன்று அரண்மனை 4 வெளியாகியிருக்கிறது. இதில், தமன்னா, ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். 

மேலும் படிக்க | “இனிமே வரவே மாட்டேன்” குக் வித் கோமாளி 5-ல் இருந்து விலகிய பிரபலம்!

கடைசியாக வெளிவந்த அரண்மனை 3 திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பினை பெறவில்லை. இந்த நிலையில், இப்படத்திற்கும் அதே நிலை தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் பார்த்த ரசிகர்கள் இப்படத்திற்கு நல்ல விமர்சனத்தையே கொடுத்திருக்கின்றனர். 

இந்நிலையில் தற்போது அரண்மனை 4 படம் இரண்டு நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பார்ப்போம். அதன்படி, கடந்த மே 3 ஆம் தேதி வெளியான அரண்மனை 4 திரைப்படம் முதல் நாளில் 4.65 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் இரண்டாம் நாளில் 6.25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக இரண்டு நாட்களில் அரண்மனை 2 படம் 10.90 கோடி ரூபாய் வசூல் செய்து வெற்றிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று 8 முதல் 10 கோடி ரூபாய் வரை வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

மேலும் படிக்க | Zee 5-ல் அசத்தலான அரசியல் த்ரில்லர்! 'தலைமைச் செயலகம்' சீரிஸின் டீசர் வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News