இந்த சின்ன சின்ன விதையில் இவ்வளவு நன்மைகள் நிறைந்து இருக்கா?

Benefits Of Roasted Pumpkin Seeds: இதில் ஒன்றல்ல பல நன்மைகள் உள்ள சத்துக்கள் உள்ளன. மேலும் இதை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்போம்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 27, 2023, 09:52 AM IST
  • பூசணி விதைகள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் களஞ்சியமாகும்.
  • உடல் செயல்பாடுகளில் இந்த தாதுக்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
  • இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
இந்த சின்ன சின்ன விதையில் இவ்வளவு நன்மைகள் நிறைந்து இருக்கா? title=

பூசணி விதையின் ஆரோக்கிய நன்மைகள்: ஆரோக்கியத்திற்கு எது நல்லதோ அதை நாம் நமது அன்றாட உணவில் (pumpkin seeds in diet) சேர்க்க வேண்டும். இன்று நாம் பூசணி விதைகளைப் பற்றி தான் காணப்போகிறோம், இது உங்கள் ஆரோக்கியத்திற்கு (health benefits of pumpkin) பல்வேறு வகையில் நன்மை செய்யும். மக்கள் பெரும்பாலும் பூசணி விதைகளை பயனற்றதாகக் கருதி எறிந்து விடுகிறார்கள், ஆனால் மாறாக நீங்கள் அதை கழுவி சேமித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் ஒன்றல்ல பல நன்மைகள் உள்ள சத்துக்கள் உள்ளன. எனவே இப்போது பூசணி விதையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்போம்.

பூசணி விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

1- காலையில் பூசணி விதைகளை சாப்பிடுவது உங்கள் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும். இந்த விதையில் நார்ச்சத்து அதிகம். இதுவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இதில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது.

2- இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அதே நேரத்தில், இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

மேலும் படிக்க | மஞ்சள் மஞ்சளா பற்கள் இருக்கா.. அப்போ இந்த ஆயுர்வேத வைத்தியம் தான் பெஸ்ட்

3- அதே நேரத்தில், விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, நீங்கள் தினமும் 1 கைப்பிடி பூசணி விதைகளை சாப்பிடலாம். இது டெஸ்டோஸ்டிரோன் அளவையும் நன்றாக வைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த விதையை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும். பூசணி விதைகளை  (pumpkin seeds in snacks) வறுத்து சிற்றுண்டியாக சாப்பிடலாம்.

4- மிகவும் பலவீனமாகவும் சோர்வாகவும் இருப்பவர்கள் பூசணி விதைகளை (pumpkin seeds) உட்கொள்ளத் தொடங்க வேண்டும். இதன் விதைகள் உங்களை ஆற்றல் மிக்கதாக மாற்ற பெரிதும்  (boost immune system) உதவுகின்றன. இது உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்தை  (boost metabolism) பலப்படுத்துகிறது.

5- நீங்கள் நல்ல தூக்கத்தைப் பெற விரும்பினால், பூசணி விதைகளை கண்டிப்பாக உட்கொள்ளுங்கள், ஏனெனில் அதில் உள்ள டிரிப்டோபான், அமினோ அமிலமாக செயல்படுகிறது, இவை தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.

6- பூசணி விதைகள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் களஞ்சியமாகும். இவற்றில் மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை போதுமான அளவில் உள்ளன. ஆரோக்கியமான எலும்புகள் முதல் ஆற்றல் வளர்சிதை மாற்றம் வரை பல உடல் செயல்பாடுகளில் இந்த தாதுக்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

7- பூசணி விதையில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது. இவை சரும செல்களை ஆரோக்கியமாக்குவதால், சருமம் பளபளப்பாகத் தோன்றும்.

8- அற்புதமான ஊட்டச்சத்துக்கள் கொண்ட பூசணி விதைகளை உங்கள் காலை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள். இதயம் ஆரோக்கியமாக இருக்க இவற்றை உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம்.

9- கொலஸ்ட்ரால் மேலாண்மை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது பூசணி விதைகளில் பைட்டோஸ்டெரால்கள் உள்ளன, அவை கொலஸ்ட்ரால் குறைக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றவை. இந்த விதைகளை தவறாமல் உட்கொள்வது உங்கள் கொலஸ்ட்ரால் அளவை சமநிலைப்படுத்த உதவும்.

(பொறுப்பு துறப்பு: வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியுடன் எழுதப்பட்ட கட்டுரை இது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குறைவாக சாப்பிடணும்... வயிறு நிறைவாகவும் இருக்கணுமா... ‘இந்த’ டிப்ஸ் உதவும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News