ரயில்வே கொடுத்த ஷாக்.. 1½ மணி நேரம் முன்னதாக வந்த ரயில்... தவற விட்ட 45 பயணிகள்!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள மன்மட் சந்திப்பில் வியாழக்கிழமை ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது. கோவா எக்ஸ்பிரஸ் 90 நிமிடங்களுக்கு முன்னதாக நிலையத்திற்கு வந்தது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 3, 2023, 05:59 PM IST
  • கோவா எக்ஸ்பிரஸ் 90 நிமிடங்களுக்கு முன்பு மன்மட் சந்திப்பிற்கு வந்தது.
  • பயணிகளை ஏற்றிச் செல்லாமல் புறப்பட்ட ரயில்.
  • கீதாஞ்சலி எக்ஸ்பிரஸில் 45 பயணிகள் அமர வைக்கப்பட்டனர்.
ரயில்வே கொடுத்த ஷாக்.. 1½ மணி நேரம் முன்னதாக வந்த ரயில்... தவற விட்ட 45 பயணிகள்! title=

இந்தியாவில், ரயில் நெட்வொர்க், உலகின் மிக முக்கிய, மிக பெரிய போக்குவரத்து சேவையில் ஒன்று. நாட்டின் உள்ள நகரங்கள் முதல் கிராமங்கள் வரை மூலை முடுக்கை எல்லாம் இணைக்கிறது இந்த ரயில் சேவை. தினமும் கோடிக்கணக்கானோர் இதில் பயணிக்கின்றனர். இந்நிலையில், இந்திய ரயில்வேயில் இது வரை நடக்காத ஒரு சம்பவம் நடந்துள்ளது. 

ரயிலில் எங்காவது செல்ல வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டீர்கள். நீங்கள் சரியான நேரத்தில் ரயில் நிலையத்தை அடைகிறீர்கள். மேடையில் சிறிது நேரம் காத்திருப்போம். பின்னர் ரயில் வராததால் நாம் விசாரிப்போம். ரயில் நிலையத்திற்கு 90 நிமிடங்களுக்கு முன்னதாக வந்து 5 நிமிடம் நின்றுவிட்டுப் புறப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள மன்மட் சந்திப்பில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. மன்மட் சந்திப்பில் ரயிலுக்காகக் காத்திருந்த 45 பயணிகள், ரயில் வராததால், நிலையத்தில் விசாரித்தனர். தங்கள் ரயில் 90 நிமிடங்களுக்கு முன்னதாக ரயில் நிலையத்திற்கு வந்துவிட்டதை பின்னர் தான் அறிந்தனர். அவர்களை அழைத்துச் செல்லாமல் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு புறப்பட்டுச் சென்றதையும் அறிந்ததும் திகைத்துப் போனார்கள்.

 90 நிமிடங்களுக்கு முன்பு வந்த கோவா எக்ஸ்பிரஸ்

தில்லி செல்லும் வாஸ்கோடகாமா-ஹஸ்ரத் நிஜாமுதீன் கோவா எக்ஸ்பிரஸ், மாற்றுப்பாதை வழியாக வியாழக்கிழமை காலை 9.05 மணிக்கு மன்மாட் நிலையத்தை அடைந்ததாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த ரயில் மன்மாட்டில் வந்து சேரும் நேரம் 10:35. ஆனால் அது திட்டமிட்ட நேரத்திற்கு 90 நிமிடங்களுக்கு முன்னதாக மன்மட் சந்திப்பை அடைந்தது. ரயில் ஐந்து நிமிடம் நின்று 45 பயணிகளை ஏற்றாமல் மன்மாட் நிலையத்தை விட்டு புறப்பட்டு சென்றதாக அவர் கூறினார்.

மேலும் படிக்க | மின்னல் வேகத்தில் செல்லும் உலகின் அதிவேக ரயில்... மணிக்கு 600 கிமீ வேகம்..!

அதிர்ச்சி அடைந்த பயணிகள்

பயணிகள் ரயிலில் ஏறுவதற்காக காலை 9.45 மணியளவில் நிலையத்தை அடைந்தபோது, ​​​​ரயில் ஏற்கனவே அவர்களை விட்டுவிட்டு சென்றதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அசைந்ததாக அதிகாரி கூறினார். இதனால் அவதியடைந்த பயணிகள் ரயில் நிலைய மேலாளர் அலுவலகத்திற்கு சென்று மாற்று ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுத்தனர். மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி டாக்டர் சிவராஜ் மனஸ்புரே கூறுகையில், ரயில்வே ஊழியர்கள் தவறு காரணமாக இது நடந்துள்ளதாகவும். இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம்

பாதிக்கப்பட்ட பயணிகள் கீதாஞ்சலி எக்ஸ்பிரஸில் அனுப்பி வைக்கப்பட்டனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் மன்மட் சந்திப்பில் நிறுத்தப்பட்டது. பயணிகள் அதன் மூலம் ஜல்கானை அடைந்தனர், அங்கு கோவா எக்ஸ்பிரஸ் அவர்கள் வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டது. கோவா எக்ஸ்பிரஸ் பெல்காமி-மிராஜ்-டவுன்ட் வழித்தடத்தில் இருந்து ரோஹா-கல்யாண்-நாசிக் சாலை வழித்தடமாக மாற்றப்பட்டதால், கோவா எக்ஸ்பிரஸ் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே மன்மாட் சென்றடைந்ததாக அவர் கூறினார்.

இந்திய ரயில்வே

இந்திய ரயில்வேயின் சேவையையும் தரத்தையும் மேம்படுத்த ரயில்வே அமைச்சகம் தொடர்ந்து முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு முறை தவறு நடக்கும் போதும், தீவிரமாக விசாரிக்கப்பட்டு, அவை மீண்டும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் படிக்க | 44 நடைமேடைகள்... 67 ரயில்தடங்கள்... உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News