பைக் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு... இதையெல்லாம் செய்தால் உங்கள் வண்டி போலீசாருக்கு தான்!

Illegal Bike Modification: உங்கள் பைக்கில் பல்வேறு மாற்றங்களை செய்வது உங்களுக்கு பிடித்தமானதாக இருக்கலாம், ஆனால் அதில் சில மாற்றங்கள் போலீசாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Sep 9, 2023, 01:47 PM IST
  • சட்டவிரோத வாகன மாற்றங்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும்.
  • சில நேரங்களில் உங்களின் பைக்கை பறிமுதல் செய்யவும் வாய்ப்புள்ளது.
  • இதனால், இது குறித்த விழிப்புணர்வு அவசியமாகும்.
பைக் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு... இதையெல்லாம் செய்தால் உங்கள் வண்டி போலீசாருக்கு தான்! title=

Illegal Bike Modification: நீங்கள் உங்கள் மோட்டார் சைக்கிளில் மாற்றங்களைச் செய்யப் போகிறீர்கள் என்றால், நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்தியாவில் முற்றிலும் சட்டவிரோதமான சில பைக் மாற்றங்களும் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

மேலும் அவற்றை உங்கள் பைக்கில் செய்தால், இதன் காரணமாக உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். போலீசார் உங்களுக்கு அபராதம் விதிப்பது மட்டுமின்றி பைக்கை பறிமுதல் செய்யவும் வாய்ப்புள்ளது. பெரும்பாலான பைக் உரிமையாளர்களுக்கு இது குறித்த போதிய விழிப்புணர்வு கிடையாது. எனவே முற்றிலும் சட்டவிரோதமான பைக் மாற்றங்களைப் பற்றி இங்கு முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்.

சிலர், மோட்டார் சைக்கிளின் சத்தத்தை இரட்டிப்பாக்க, அதில் அதிக சத்தத்தை உண்டாக்கும் சைலன்சரை (Firecracker Silencer) பொருத்தி, அதிக சத்தம் எழுப்புவார்கள். அதாவது, அதிவேகமாக பைக்கை இயக்கும் போது, பட்டாசு வெடிப்பது போல் அது பலத்த சத்தம் எழுப்புகிறது. இது அந்த பைக்கின் உதிரி பாகத்தை எடுத்துவிட்டு புதிதாக பொருத்துகின்றனர். இதுபோன்று மாற்றங்கள் செய்தால் போக்குவரத்து போலீசார் தங்களைப் பிடித்தால், ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்பது பெரும்பாலான பைக் ஓட்டுநர்களுக்குத் தெரியாது. பட்டாசு வெடிப்பது போன்று ஒலி எழுப்பும் சைலன்சரால் ஒலி மாசு ஏற்படுகிறது. எனவே, இது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு செம டூர் பேக்கேஜ்.. ரயில்வே தந்த செம அப்டேட்

நம்பர் பிளேட் மாற்றம்

இந்தியா முழுவதும் உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, எனவே இன்னும் இந்த நம்பர் பிளேட்டைப் பயன்படுத்தாமல் அதற்கு பதிலாக டிசைனர் நம்பர் பிளேட்களைப் பயன்படுத்துபவர்களுக்கு ரூ. 5000 முதல் ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டும். குறிப்பாக, நம்பர் பிளேட்களில் புதுபுது வடிவமைப்பு செய்தால், மோட்டார் சைக்கிளின் எண் சரியாகத் தெரியாது என கருதப்படுகிறது. எனவே இவை தடை செய்யப்பட்டுள்ளன. 

அதிக சத்தம் எழுப்பும் ஹார்ன்

இப்போதெல்லாம், மோட்டார் சைக்கிள்களுக்கு சந்தையில் பல வகையான உரத்த சத்தம் எழுப்பும் ஹார்ன்கள் கிடைக்கின்றன. இருப்பினும் அவற்றில் பெரும்பாலானவை முற்றிலும் சட்டவிரோதமானது, ஏனெனில் அவை ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. போக்குவரத்து காவல்துறையின் கூற்றுப்படி, நீங்கள் உங்கள் மோட்டார் சைக்கிளில் ஸ்டாக் ஹார்னை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவீர்கள், மேலும் நீங்கள் அதிக சத்தம் கொண்ட ஹார்னைப் பயன்படுத்தினால், உங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். 

மோட்டார் சைக்கிள் முழுமையான மாற்றம்

இப்போதெல்லாம், மோட்டார் சைக்கிள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக, மக்கள் அதில் பல்வேறு மாற்றங்களை செய்து முழுமையாக நிறத்தையும் வடிவமைப்பையும் மாற்றிவிடுகின்றனர். இதனால் மோட்டார் சைக்கிளின் உண்மையான நிறம் மற்றும் வடிவமைப்பு புரியாது. அத்தகைய மோட்டார் சைக்கிளை போக்குவரத்து போலீசார் பிடித்தால், அதன் உரிமையாளர் கடுமையாக தண்டிக்கப்படுவார்.

மேலும் படிக்க | UPI ATM... பணம் எடுக்க டெபிட் கார்டு, கிரெடிட் கார்டி இரண்டும் தேவையில்லை...!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News