3 வாரங்களில் 10 கிலோ எடை குறைப்பது எப்படி? இதோ சில சிம்பிள் டிப்ஸ்!

மூன்றே வாரங்களில் 10 கிலோ எடையை குறைக்க முயற்சி செய்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான ஈசி டிப்ஸ்! 

Written by - Yuvashree | Last Updated : Oct 21, 2023, 08:35 PM IST
  • 3 வாரங்களில் 10 கிலோ எடையை குறைப்பது எப்படி?
  • உப்பு, சர்கரையை தவிர்க்க வேண்டும்.
  • சாப்பிடாமல் இருக்க கூடாது.
3 வாரங்களில் 10 கிலோ எடை குறைப்பது எப்படி? இதோ சில சிம்பிள் டிப்ஸ்! title=

உடல் எடை குறைப்பது சாதாரண விஷயம் அல்ல. இதற்காக நாம் பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. மூன்று வாரங்களில் எடை குறைக்கவும் பல வழிமுறைகள் உள்ளது. அவை என்னென்ன தெரியுமா? 

1.எலுமிச்சை நீர்:

எலுமிச்சை நீர் அல்லது எலுமிச்சை ஜூஸ் குடிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். காலையில் எழுந்தவுடன் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்த பின்னர், எலுமிச்சை நீரினை குடிக்கலாம். இது உங்களது மெட்டபாலிச சத்தினை அதிகரிக்க உதவும். உடலில் உள்ள அழுக்குகளை அகற்றுவதற்கும் லெமன் வாட்டரை பயன்படுத்தலாம். உடலில் உள்ள கல்லீரலை சுத்திகரிக்க உதவும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளவும் எலுமிச்சை நீர் உதவும். காலையில் இதை குடிப்பதனால், உடலில் உள்ள கொழுப்பு கரையும் என கூறப்படுகிறது. 

2.முன் கூட்டியே இரவு உணவை சாப்பிட்டு விடுங்கள்:

தினமும் சீக்கிரமாக இரவு உணவு (டின்னர்) எடுத்துக்கொள்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். இரவு உணவை 7 மணிக்கு உணவு எடுத்துக்கொள்வது சிறப்பு. இதன் பிறகு எதையும் சாப்பிட கூடாது. இது, நம் உடலுக்கு சாப்பிட்ட உணவை உறங்குவதற்குள்ளாக செரிமானம் செய்ய வாய்ப்பளிக்கிறது. சாப்பிட்டவுடன் தூங்குவதால் நம் உடலில் கொழுப்பு சேர வாய்ப்புள்ளது, செரிமான கோளாறுகளும் உருவாகும். எனவே, முன்கூட்டியே டின்னர் எடுத்துக்கொள்வது உடல் எடையை குறைக்க பயனுள்ளதாக இருக்கும். 

மேலும் படிக்க | நாம் தெரியாமல் செய்யும் இந்த தவறுகள் சருமத்தை பாதிக்கும்! ஜாக்கிரதை!

3.நல்ல ஓய்வு:

நம் உடலுக்கு ஓய்வு தருவது நம்மை பலப்படுத்த உதவும். சரியாக ஓய்வெடுக்கவில்லை என்றால், நம் உடலில் உள்ள ஆற்றல் சக்தி சீர்குலைந்து போக வாய்ப்புள்ளது. ஆற்றல் குறைவதினால், நாம் உடல் எடையை குறைக்க என்னென்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோமோ அந்த நடவடிக்கைகளை எல்லாம் நம்மால் செய்ய முடியாமல் போய்விடும். இதனால், நாம் உடல் எடையை குறைக்க எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும்.

4.ஹெல்தியான உணவுகளை சாப்பிடுங்கள்..

உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால் ஹெல்தியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. உடல் எடையை குறைக்க, டயட் இருந்து ஹெல்தியான உணவுகளை சாப்பிட வேண்டியது மிகவும் முக்கியம். எண்ணெய் சேர்க்காத, அதிகம் கொழுப்பு இல்லாத, பதப்படுத்தாத உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, வேகவைத்த உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. இது, உடல் எடையை வேகமாக குறைக்க உதவும். 

5.சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம்:

நம்மில் பலருக்கு சாப்பிடாமல் இருந்தால் உடல் எடையை குறைத்து விடலாம் என்ற தவறான கண்ணோட்டம் இருக்கிறது. இதனால் உடல் எடை கூடுமே அன்றி, குறையாது. மொத்தமாக சாப்பிடுவதை தவிர்ப்பதற்கு பதிலாக, உங்கள் உணவை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட பழகிகொள்ளுங்கள். டயட்டில் இருந்து உணவை பிரித்து சாப்பிடுவது உங்களது மெட்டபாலிச சத்துக்களை அதிகரிக்க உதவும். காலையில் நன்றாக சாப்பிட்டு, இரவில் குறைவாக சாப்பிடுங்கள். மதிய வேளைகளிலும் குறைவான அளவு உணவினை எடுத்துக்கொள்வது நல்லது. 

6. உப்பு, சர்க்கரையை தவிர்த்து விடுங்கள்:

உடல் எடையை வேகமாக குறைக்க நினைத்தால், கண்டிப்பாக உங்கள் உணவில் அதிகளவு சர்க்கரை அல்லது உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். உப்பு உங்கள் உடலில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்ச வாய்ப்புள்ளது. சர்க்கரை தேவையில்லாத உடல் உபாதைகளை உடலில் கொண்டு சேர்க்கும். எனவே, முடிந்தளவு உங்களின் உணவில் இவற்றை குறைத்து கொள்வது நல்லது. 

மேலும் படிக்க | 100 வயது வரை வாழ வேண்டுமா..? ‘இதை’ செய்தால் போதும்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News