ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ்க்கு விண்ணப்பிப்பது எப்படி?

How To Apply For An E-Pass: இந்த பாஸ் நடைமுறை ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்லும் அணுகலை மட்டும் தராமல், அரசிற்கு அவை ஒரு தவுகளாக மாறுகிறது.    

Written by - RK Spark | Last Updated : May 20, 2024, 06:31 AM IST
  • ஊட்டி செல்ல இ-பாஸ் கட்டாயம்.
  • கூட்ட நெரிசலை தவிர்க்க அரசு நடவடிக்கை.
  • பலரும் விண்ணப்பித்து வருகின்றனர்.
ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ்க்கு விண்ணப்பிப்பது எப்படி? title=

How To Apply For An E-Pass: தமிழக அரசு சமீபத்தில் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்ற பின்பு தான் செல்ல வேண்டும் என்று கூறி இருந்தனர். ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற மலைசார்ந்த சுற்றுலா இடங்களில் பயணிகளின் வருகையை குறைப்பதற்கும், சுற்றுலா வருபவர்களுக்கு நல்ல சுற்றுலா அனுபவத்தை உறுதி செய்வதற்கும் தமிழக அரசு இந்த நடைமுறை அமல்படுத்தியது. கோடை விடுமுறையில் ஏற்படுத்தும் கூட்ட நெரிசலால் பல வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளானர். இந்த புதிய செயல்முறையை பலரும் பின்பற்றியும் வருகின்றனர்.

மேலும் படிக்க | வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்... வருமான வரி விதிகள் கூறுவது என்ன..!!

இ-பாஸ்கள் முதலில் கொரோனா காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க இவை கொண்டு வரப்பட்டன. தற்போது ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களில் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால் பெரும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனை ஒழுங்குபடுத்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த இ-பாஸ் நடைமுறை கடந்த மே 6 அன்று தொடங்கப்பட்டது. கோடை விடுமுறை முடியும் வரை அதாவது ஜூன் 30 வரை நடைமுறையில் இருக்கும். இந்த இ-பாஸ் சுற்றுலா தளங்களும் செல்லும் அணுகலை மட்டும் வழங்கவில்லை. மாறாக அவை வாகன எண்கள், பயணிகளின் எண்ணிக்கை மற்றும் தங்கியிருக்கும் காலம் பற்றிய தகவல்களை சேகரிக்க உதவுகின்றன. 

கொடைக்கானல் மற்றும் ஊட்டி செல்ல இ-பாஸ் பெற கட்டணம் எதுவும் கட்டத்தேவை இல்லை. நீலகிரி மாவட்டத்திற்குச் செல்ல எப்போதும் கொடுக்கும் நுழைவுச் சீட்டுக் கட்டணத்தை மட்டுமே பயணிகள் செலுத்தினால் போதும். சுற்றுலா தளங்களுக்கு செல்லும் தனியார் வாகனங்கள் அனைத்தும் இந்த இ-பாஸ் எடுப்பது கட்டாயம். இந்த மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் அரசு பேருந்துகள் வழியாக வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உள்ளூர் வாசிகளும் இ-பாஸ் எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

இ-பாஸுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான epass.tnega.org மூலம் நேரடியான இ-பாஸ்க்கு விண்ணப்பிக்கலாம். வாகனத்தில் எத்தனை பேர் வருகின்றனர், எரிபொருள் வகை உள்ளிட்ட வாகன விவரங்கள், உள்ளே செல்லும் மற்றும் வெளியேறும் தேதி, வருகையின் நோக்கம், தகவல் தொடர்பு எண்கள் போன்றவற்றை கொடுக்க வேண்டியது அவசியம். நீங்கள் விண்ணப்பத்தை சமர்பித்ததும் தனிப்பட்ட QR குறியீட்டைக் கொண்ட மின்-பாஸைப் பெறுவீர்கள். இந்த QR குறியீடு ஊட்டி மற்றும் கொடைக்கானலில் நுழைவு பகுதிகளில் அரசு அதிகாரிகளால் சரிபார்க்கப்படும். 

அதிகரித்து வரும் மழை

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 20ம்  தேதிக்கு மேல் ஒரு சில இடங்களில் அதிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே ஊட்டி, கொடைக்கானல், தேக்கடி, தென்காசி, ஒக்கேனக்கல, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு செல்லும் பொமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று வானிலை ஆய்வு மைய தகவலை பகிர்ந்து பேரிடர் மேலாண்மை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க | ரிஸ்க் எல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி - இளைஞர்கள் விரும்பும் 'இந்த புதிய' முதலீடு - என்னது அது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News