மின்சாரத் தேவை குறைகிறதா? ஆச்சரியமளிக்கும் டிசம்பர்! ஆனால் இது 2023 ஸ்பெஷல்!

Electricity Consumption 2023 December: கடந்த மாதம் மக்கள் குறைவாகவே மின்சாரத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்ற செய்தி ஆச்சரியத்தை அளிக்கிறது. காரணம் என்ன தெரியுமா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 2, 2024, 07:47 AM IST
  • 2023இல் மின்சாரம் குறைவாக பயன்படுத்தப்பட்ட்ட மாதம்
  • டிசம்பரில் கணிசமாக குறைந்த மின்சாரத் தேவை
  • ஆச்சரியம் அளிக்கும் மின்சாரக் கட்டணக் குறைவு
மின்சாரத் தேவை குறைகிறதா? ஆச்சரியமளிக்கும் டிசம்பர்! ஆனால் இது 2023 ஸ்பெஷல்! title=

நியூடெல்லி: 8 மாதங்களில் முதல் முறையாக மின் நுகர்வு குறைந்துள்ளது, அரசு புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன தெரியுமா?
நாட்டில் வழக்கமான மின்சார பயன்பாட்டை விட கடந்த மாதம் மக்கள் குறைவாகவே மின்சாரத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்ற செய்தி ஆச்சரியத்தை அளிக்கிறது. 2023ம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் குளிர் அதிகமாக இருக்கும் என்பதால் வழக்கத்தைவிட அதிகமாக மின்சாரம் பயன்படுத்தப்படும்.

ஆனால், கடந்த 8 மாதங்களில், டிசம்பர் மாதம், இந்தியாவின் மின் நுகர்வு மிகக் குறைந்த அளவில் இருந்தது என்பது வியப்பளிக்கிறது. பிற மாதங்களுடன் ஒப்பிடும்போது, கடந்த மாதமான டிசம்பரில் நாட்டில் மின் பயன்பாடு 2.3 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், மக்களுக்கு இந்த மாதம் கட்ட வேண்டிய கட்டணம் குறையும் என்றால், அரசுக்கும் மானியச் செலவு குறையும். 

கடந்த எட்டு மாதங்களில் மின் நுகர்வில் 2.3 சதவீதம் சரிவு காணப்படுவது இதுவே முதல் முறை. இது டிசம்பர் மாதத்தில் 119.07 பில்லியன் யூனிட்டுகளாக குறைந்துள்ளது. மத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு மின் நுகர்வு 1.5 சதவீதம் குறைந்து 132.02 பில்லியன் யூனிட்களாக இருந்தது.

2023ஆம் ஆண்டின் மிகவும் குறைவான மின்சார நுகர்வு உள்ள மாதம் டிசம்பர் மாதம் தான். இதுவே, டிசம்பர் 2022 இல் மின் நுகர்வு 121.91 பில்லியன் யூனிட்களாக இருந்தது. அதாவது, ஒரு வருடத்திற்கு முன்பு இதே மாதத்தில் இது 109.17 பில்லியன் யூனிட்டுகளை விட அதிகமாக இருந்தது.

மேலும் படிக்க | பங்குச்சந்தை முதலீடு மூலம் கோடீஸ்வரனாக... நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை!

மின்சார நுகர்வு குறைவதற்கான காரணங்கள்

டிசம்பரில் அதிகபட்சமாக 213.62 ஜிகாவாட் மின்சாரத் தேவை இருந்தது. அதேசமயம், 2022ல் 205.10 GW ஆகவும், 2021 டிசம்பரில் 189.24 GW ஆகவும் இருந்தது. நிபுணர்களின் கூற்றுப்படி, டிசம்பர் முதல் பதினைந்து நாட்களில் குளிர்காலம், எதிர்பார்த்ததைவிட மிதமானதாக இருந்தது. இதன் காரணமாக, மின்சார நுகர்வு மற்றும் தேவை குறைவாகவே இருந்தது.

குறிப்பாக வட இந்தியாவில், கடும் குளிர் நிலவும் டிசம்பர் மாதத்தின் இரண்டாவது பகுதியில், அதிலும் இறுதி பதினைந்து நாட்களில், வெப்ப நிலை மிகவும் குறைந்ததை அடுத்து தான் மின்சார நுகர்வு மற்றும் தேவை அதிகரித்தது.

மின்சாரத்திற்கான அதிகபட்ச தேவை எப்போது இருந்தது?
2023 டிசம்பர் மாத மின் நுகர்வு
அரசுப் புள்ளிவிபரங்களின்படி, டிசம்பர் 29ஆம் தேதியன்று அதிகபட்ச மின்சாரத் தேவை 213.62 ஜிகாவாட்டை எட்டியது. இது டிசம்பர் 3ம் தேதி 174.16 ஜிகாவாட்டாக இருந்தது. இது டிசம்பர் 14, 2023 அன்று 200.56 GWஆக இருந்தது. 

மேலும் படிக்க | பணத் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க... புத்தாண்டில் எடுக்க வேண்டிய 12 தீர்மானங்கள்!

2023 கோடைக்கால மின் நுகர்வு
நாட்டின் மின் தேவையானது கடந்த கோடையில் 229 மெகாவாட்டை எட்டும் என்று மத்திய அரசு மதிப்பிட்டிருந்தது. ஆனால், ஏப்ரல்-ஜூலை மாதங்களில் மின்சாரத் தேவை இந்த அளவை எட்டவில்லை.

நிபுணர்களின் கருத்து
மின்சாரத்தின் அதிகபட்ச தேவையை பூர்த்தி செய்ய, ஜூன் மாதத்தில் 224.1 ஜிகாவாட்டை எட்டியது, இது ஜூலையில் 209.03 ஜிகாவாட்டாக இருந்தது. ஆகஸ்டில் அதிகபட்ச தேவை 238.82 ஜிகாவாட்டாகவும், செப்டம்பர் 2023 இல் 243.27 ஜிகாவாட்டாகவும் இருந்தது.

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இது 222.16 ஜிகாவாட்டாகவும், 204.86 ஜிகாவாட்டாகவும் இருந்தது. அதிகரித்து வரும் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் குளிர் அதிகரித்து வருவதால், வரும் மாதங்களில் மின் நுகர்வு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களே... இன்னும் 7 நாள் தான் இருக்கு... சான்ஸை மிஸ் பண்ணாதீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News