மேற்கு ஷில்லாங் மேகாலயா சட்டமன்றத் தொகுதி: எர்னஸ்ட் மாவ்ரி பிஜேபி VS பெத்லீன் டிகார் INC

WEST SHILLONG ELECTION RESULT 2023: அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளுமா ஆளும் கட்சி? மேற்கு ஷில்லாங் மேகாலயா சட்டமன்றத் தொகுதி: எர்னஸ்ட் மாவ்ரி பிஜேபி VS பெத்லீன் டிகார் INC

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 2, 2023, 09:33 AM IST
  • மேகாலயாவின் மேற்கு ஷில்லாங் தொகுதி கள நிலவரம்
  • மேகாலயா சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை
  • அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளுமா ஆளும் கட்சி?
மேற்கு ஷில்லாங் மேகாலயா சட்டமன்றத் தொகுதி: எர்னஸ்ட் மாவ்ரி பிஜேபி VS பெத்லீன் டிகார் INC title=

West Shillong Meghalaya Legislative Assembly Election Result 2023: மேகாலயா சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கிய நிலையில், NPP அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று ஆளும் கட்சி NPP நம்புகிறது. ஆனால், அந்தக் கட்சி, அதன் முன்னாள் கூட்டாளியான BJP-யிடம் இருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது.

இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக முறிந்தது. தற்போது என்.பி.பி அனைத்து 60 இடங்களிலும் போட்டி போட்டுள்ளது.

இன்று வாக்குகள் எண்ணத் தொடங்கிய நிலையில்,மேகாலயாவின் தொகுதி எண் 18 - மேற்கு ஷில்லாங்கிற்கான சட்டமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்ற ஆவல் அதிகரித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் எர்னஸ்ட் மாவ்ரி மற்றும் காங்கிரஸின் பெத்லீன் தகார் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

மேகாலயாவின் மேற்கு ஷில்லாங் தொகுதியானது, மாநிலத்தின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் 25,181 வாக்காளர்களைக் கொண்டுள்ளது. 13,456 ஆண் வாக்காளர்கள் மற்றும் 13,725 பெண்கள் ஆகியோர் மட்டுமே வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள். இங்கு, மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Rahul Gandhi: மேகாலயாவில் மட்டும் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் செய்த மர்மம் இது

இந்த சட்டசபைத் தேர்தலில், விபிபியின் ராஜா ஜிர்வா, யுடிபியின் பால் லிங்டோ, என்பிபியின் மொஹேந்திரோ ராப்சாங், டிஎம்சியின் இவான் மரியா, பாஜகவின் எர்னஸ்ட் மாவ்ரி, மற்றும் காங்கிரஸின் பெத்லீன் தகார் என மொத்தம் 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த பிரதான ஆறு வேட்பாளர்களில், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த ஆண்டு, மேற்கு ஷில்லாங் தொகுதியில் வாக்குப்பதிவு 68.64 சதவீதமாக இருந்தது, இது 2018 சட்டமன்றத் தேர்தலை விட ஒப்பீட்டளவில் குறைவு. மேற்கு ஷில்லாங் தொகுதி, பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதி ஆகும். கடந்த தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸின் மொஹேந்திர ராப்சங் 1,984 வாக்குகள் வித்தியாசத்தில் UDP இன் பால் லிங்டோவை எதிர்த்து வெற்றி பெற்றார். இந்த இடத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் 52.56 சதவீத வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தலில், ராகுல் காந்தி வந்து பிரச்சாரம் செய்தார் என்பதால், பாஜகவை வீழ்த்திவிட முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது.

மேலும் படிக்க | Meghalaya: முதல்வராகும் கான்ராட் சங்மாவின் கனவு, நனவாகுமா? கானல் நீராகுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News