4ம் கட்ட மக்களவைத் தேர்தல்... தொகுதிகள்... முக்கிய வேட்பாளர்கள்... பிற விபரங்கள்..!!

மக்களவைத் தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், நான்காவது கட்ட தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. மூன்று கட்டங்களில் முறையே ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 10, 2024, 05:36 PM IST
  • மக்களவை தேர்தல் 4ம் கட்ட வாக்குப்பதிவு: மாநிலங்கள் மற்றும் தொகுதிகளின் பட்டியல்.
  • 2024 மக்களவை தேர்தல் 1, 2 மற்றும் 3ம் கட்ட வாக்குப்பதிவு விபரம்.
  • வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும்.
4ம் கட்ட மக்களவைத் தேர்தல்... தொகுதிகள்... முக்கிய வேட்பாளர்கள்... பிற விபரங்கள்..!! title=

மக்களவைத் தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், நான்காவது கட்ட தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. மூன்று கட்டங்களில் முறையே ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. 18வது மக்களவை தேர்தலின், நான்காம் கட்ட வாக்குப்பதிவு மே 13ல் நடக்கிறது. மூன்றாம் கட்டமாக, 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தை உள்ளடக்கிய 96 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பீகார், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் போன்ற சில முக்கிய மாநிலங்களில் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும்.

மக்களவைத் தேர்தல் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகள்

நான்காம் கட்டத்தில், 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. நான்காவது கட்டத்தில் ஆந்திரப் பிரதேசம் (25 தொகுதிகள்), பீகார் (5 தொகுதிகள்), ஜம்மு காஷ்மீர் (1 தொகுதி), ஜார்கண்ட் (4 தொகுதிகள்), மத்தியப் பிரதேசம் (8 தொகுதிகள்), மகாராஷ்டிரா (11 தொகுதிகள்), ஒடிசா (4 தொகுதிகள்), தெலங்கானா (17 தொகுதிகள்)  உத்தரப் பிரதேசம் (13 தொகுதிகள்), மற்றும் மேற்கு வங்கம் (8 தொகுதிகள்) ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறும்.

நான்காம் கட்ட மக்களவை தேர்தலில் (Lok Sabha Elections) 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து மொத்தம் 1,717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்தப் பகுதிகளில் உள்ள 96 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு 4,264 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஏப்ரல் 25, 2024 ஆகும். ஆய்வுக்குப் பிறகு, 1,970 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

2024 மக்களவை தேர்தல் 4ம் கட்ட வாக்குப்பதிவு: மாநிலங்கள் மற்றும் தொகுதிகளின் பட்டியல்

ஆந்திரப் பிரதேசம்: அரக்கு (ST), ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், அனகாபள்ளி, காக்கிநாடா, அமலாபுரம் (எஸ்சி), ராஜமுந்திரி, நர்சாபுரம், எலுரு, மச்சிலிப்பட்டினம், விஜயவாடா, குண்டூர், நரசராவ்பேட்டை, பாபட்லா (எஸ்சி), ஓங்கோல், நந்தியால், கர்னூல், நெல்லூர், திருப்பதி (SC), ராஜம்பேட்டை, சித்தூர் (SC)

பீகார்: தர்பங்கா, உஜியார்பூர், சமஸ்திபூர், பெகுசராய், முங்கர்

ஜம்மு & காஷ்மீர்: ஸ்ரீநகர்

மத்தியப் பிரதேசம்: தேவாஸ், உஜ்ஜைன், மண்ட்சூர், ரத்லம், தார், இந்தூர், கர்கோன், கந்த்வா

மகாராஷ்டிரா: நந்தூர்பார், ஜல்கான், ராவர், ஜல்னா, அவுரங்காபாத், மாவல், புனே, ஷிரூர், அகமதுநகர், ஷீரடி, பீட்

ஒடிசா: கலஹண்டி, நபரங்பூர் (ST), பெர்ஹாம்பூர், கோராபுட் (ST)

தெலுங்கானா: அடிலாபாத் (எஸ்டி), பெத்தபள்ளி (எஸ்சி), கரீம்நகர், நிஜாமாபாத், ஜாஹிராபாத், மேடக், மல்கஜ்கிரி, செகந்திராபாத், ஹைதராபாத், செவெல்லா, மஹ்பூப்நகர், நல்கொண்டா, நாகர்கர்னூல் (எஸ்சி), புவனகிரி, வாரங்கல் (எஸ்சி), மஹ்பூபாபாத் (எஸ்டி), கம்மம்

உத்தரப் பிரதேசம்: ஷாஜஹான்பூர், கெரி, தருஹாரா, சீதாபூர், ஹர்தோய், மிஸ்ரிக், உன்னாவ், ஃபரூகாபாத், எட்டாவா, கன்னோஜ், கான்பூர், அக்பர்பூர், பஹ்ரைச் (SC)

மேற்கு வங்காளம்: பஹரம்பூர், கிருஷ்ணாநகர், ரனாகாட், பர்தமான் பூர்பா, பர்த்வான்-துர்காபூர், அசன்சோல், போல்பூர், பிர்பூம்

ஜார்கண்ட்: சிங்பூம், குந்தி, லோஹர்டகா, பலமாவ்

மேலும் படிக்க | பயங்கர இருட்டு... மைக் இல்லை - வைரலாகும் பிரியங்கா காந்தியின் அதிரடி பிரச்சாரம்!

2024 மக்களவை தேர்தல் 4ம் கட்ட வாக்குப்பதிவு: முக்கிய வேட்பாளர்களின் பட்டியல்

அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சி: கன்னோஜ், உத்தரபிரதேசம்

மஹுவா மொய்த்ரா, திரிணமும் காங்கிரஸ்: கிருஷ்ணாநகர், மேற்கு வங்கம்

கிரிராஜ் சிங், பாஜக: பெகுசராய், பீகார்

ஒய்.எஸ்.சர்மிளா, காங்கிரஸ்: கடப்பா, ஆந்திரப் பிரதேசம்

அர்ஜுன் முண்டா, பாஜக: குந்தி, ஜார்கண்ட்

சத்ருகன் சின்ஹா, திரிணமும் காங்கிரஸ்: அசன்சோல், மேற்கு வங்காளம்

மாதவி லதா, பாஜக: ஹைதராபாத், தெலுங்கானா

2024 மக்களவை தேர்தல் 1, 2 மற்றும் 3ம் கட்ட வாக்குப்பதிவு விபரம்

மூன்றாம் கட்ட வாக்குபதிவிற்கு பிறகு, தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, வாக்குப்பதிவு 64.4 சதவீதத்தைத் தொட்டது. 2019ம் ஆண்டும் இதே தொகுதிகளில் 67.33 சதவீத வாக்குகள் பதிவானது. முதல் கட்டமாக, 102 தொகுதிகளை உள்ளடக்கிய, 66.14 சதவீத வாக்குகள் பதிவானது.  2019 உடன் ஒப்பிடும்போது 4 சதவீத குறைவாகும். இரண்டாம் கட்டத்தில், 88 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வாக்குப்பதிவு 66.71 சதவீதமாக இருந்தது. 2019 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தோராயமாக 3 சதவீதம் குறைவாகும்.

மேலும் படிக்க | திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா? மோடியின் பேராசை பலிக்காது - கார்த்தி சிதம்பரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News