அமைதிப்படுத்த தண்டனை வழங்கப்பட்டதா? அப்படி என்றால் தீ வைத்துக் கொள்ளுங்கள்.. நிர்பயாவின் தாய்

சட்டத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால் தற்போது இருக்கும் சட்ட விதிமுறைகள் மூலம் குற்றவாளிகள் ஊக்குவிக்கப்படுவார்கள். இப்படி தான் நடக்கும் என்றால், சட்டப் புத்தகங்களுக்கு தீ வைத்து கொளுத்துங்கள் என்று நிர்பயாவின் தாயார் கூறினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 31, 2020, 07:09 PM IST
அமைதிப்படுத்த தண்டனை வழங்கப்பட்டதா? அப்படி என்றால் தீ வைத்துக் கொள்ளுங்கள்.. நிர்பயாவின் தாய் title=

புது டெல்லி: நிர்பயாவின் குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட சட்ட விருப்பங்களின் அடிப்படையில் மேலதிக உத்தரவுகள் வரும் வரை டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் மரண உத்தரவை நிறுத்தியது. அடுத்தடுத்து இரண்டாவது முறையாக, குற்றவாளிகளைத் தூக்கிலிட்டப்படுவது நிறுத்தி வைத்துள்ளதால், நிர்பயாவின் தாய் ஆஷா தேவியின் பொறுமை உடைத்தது. தீர்ப்புக்கு பின்னர், நீதிமன்றத்துக்கு வெளியே அழுத நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7 ஆண்டுகளுக்கு முன்பு எனது மகளுக்கு அநீதி அளிக்கப்பட்டது. ஆனால் குற்றவாளிகளுக்கு முன்பு அரசாங்கம் பலமுறை தலைகுனித்து வருகிறது. ஆனால் நான் தொடர்ந்து போராடுவேன் என்று கூறினார்.

 

குற்றவாளிகளின் வழக்கறிஞர் சவால் செய்தார்:
தூக்கிலிடப்பட்ட காலம் ஆயுள் காலம் வரை (லைப்-லைன்) நீடிக்கும் என்று ஏற்கனவே குற்றவாளிகளின் வழக்கறிஞர் பி. சிங் சவால் விட்டதாக நிர்பயாவின் தாய் கூறினார். மீண்டும் மீண்டும் தண்டனை நிறைவேற்றுவது கால தாமதம் செய்யப்படுகிறது என்றார்.

அவர் மேலும் கூறுகையில், அரசாங்கத்திற்கும், நீதிமன்றத்திற்கும், நீதித்துறைக்கும் நான் சொல்ல விரும்புகிறேன் என்னவென்றால், "இந்த சட்டத்தில் சரியான விதிகள் இல்லாததால், அதில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி ஒரு குற்றவாளியின் வழக்கறிஞர் எனக்கு சவால் விடுத்துள்ளார் என்று கூறினார்.

கோபமடைந்த நிற்பயாவின் தாய்:
ஆஷா தேவி தொடர்ந்து போராடுவார் என்றும், குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்றும் கூறினார். அவர், "நான் போராடுவேன்... அரசாங்கம் அவர்களை தூக்கிலிட வேண்டும், இல்லையென்றால் ஒட்டுமொத்த சமூகமும் உச்சநீதிமன்றம் தொடங்கி கீழ் நீதிமன்றம் வரை சரணடைய வேண்டியிருக்கும். மரண தண்டனை என்பது வெறும் சமாதானப்படுத்த மட்டுமே வழங்கப்பட்டதா? எனக் கூறினார்.

மரணதண்டனை குறித்து அதிருப்தி அடைந்த நிர்பயாவின் தாயும் தனக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை இருப்பதாகக் கூறினார். ஆனால் தற்போது நடக்கும் நடைமுறை மூலம் குற்றவாளிகள் ஊக்குவிக்கப்படுவார்கள். இப்படி தான் நடக்கும் என்றால், சட்டப் புத்தகங்களுக்கு தீ வைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News