பண்டிகைகளில் வாழை இலை ஏன் ஸ்பெஷல்? பல சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

வாழை இலையால் இத்தனை நன்மைகள் உண்டு என்பது நம்மில் எத்தனை  பேருக்கு தெரியும். தீராத பல நோய்களுக்கு வாழை இலைதான் மருந்தாக உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன.  

Written by - Dayana Rosilin | Last Updated : Apr 14, 2022, 12:03 PM IST
  • பாரம்பரியத்தோடு பின்றி பிணைந்த வாழை இலை
  • வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள்
  • நோய்களுக்கு இறுதி தீர்வாக வாழை இலை
பண்டிகைகளில் வாழை இலை ஏன் ஸ்பெஷல்? பல சுவாரஸ்ய தகவல்கள் இதோ! title=

பண்டிகை, விருந்து, சுப நிகழ்ச்சிகள் என்றாலே தவிற்க முடியாத ஒன்று வாழை இலை. தமிழ் மக்களின் பாரம்பரிய நிகழ்வுகளோடு பின்னி பிணைந்திருக்கும் இந்த வாழை இலையின் நன்மைகள் குறித்து நம்மில் பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். வாழை மரத்தின் ஒவ்வொரு பாகங்களும் அதாவது, வாழை பூ, வாழை தண்டு, வாழை இலை, வாழை காய் உள்ளிட்ட அனைத்துமே அதீதமான பயணளிக்கக்கூடியவை.
இதில் முக்கியமானது வாழை இலை. 

ஒரு நாள் வீட்டில் என் அம்மா மீனை மசால் தடவி வாழை இலையில் வைத்து, வாழை நாற்கொண்டு அதை இருக்கமாக கட்டி ஆவியில் வேக வைத்து சூட்டோடு சூடாக சாப்பிட கொடுத்தார்கள். அந்த மீனை வாழை இலையில் இருந்து அவிழ்த்து எடுக்கும்போது, அதன் மனமே என் மூக்கை துளைத்தது. நாவில் எச்சில் ஊர அந்த மீனை பிட்டு மெதுவாக வாயில் வைத்தேன். ஆஹா அது அப்படி ஒரு சுவை. திருப்தியாக சாப்பிட்டு முடித்த பிறகு அம்மாவிடம் கேட்டேன். மீன் செம்ம டேஸ்டா இருந்துச்சே எப்டிமா என்று. அம்மா ஒரே வார்தையில் வாழை இலையில் வச்சு சமச்சா டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும்மா என்றார். 

மேலும் படிக்க | மருத்துவ குணம் கொண்ட கற்பூரவள்ளி வாழைப்பழத்தின் அற்புத நன்மைகள்

அப்போது யோசித்தேன் வாழை இலைக்கு இப்படி ஒரு மகத்துவமா என்று. அதன் பிறகு அதை பற்றி தெரிந்துகொள்ள முயற்சி செய்தபோது பல ஸ்வாரஸ்யமான மற்றும் பயனுள்ள தகவல்கள் கிடைத்தது. என்னவென்றால் நமது முன்னோர்கள் கொளுக்கட்டை முதல் இட்லி உள்ளிட்ட பல்வேறு உணவு பண்டங்களை வாழை இலை வைத்துதான் சமைத்திருக்கிறார்கள். அதை பறிமாறி உட்கொள்ளவும் அதே வழை இலையைதான் பயன்படுத்தி இருக்கிறார்கள். 

அன்றெல்லாம் அவர்களுக்கு கண் பார்வை குறைபாடு, ரத்த அழுத்தம்போன்ற விதவிதமான நோய்கள் தாக்கவில்லை. ஆனால் இன்று இதுபோன்ற குறைபாடு இல்லாத ஆட்களைதான் தேடி கண்டறிய வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் நமது உணவு பழக்க வழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்தான். முக்கியமாக வாழை இலையின் பயன்பாட்டை குறைத்து விலை உயர்ந்த கண் கவர் தட்டுகளை நோக்கி மக்கள் படையெடுத்ததே. 

நமது அன்றாட வழக்கத்தில் வாழை இலையை முன்வைத்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். குறிப்பாக, வாழை இலையில் தினமும் உணவு உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் அனைத்தும் முற்றிலுமாக நீங்கி உடலில் உள்ள ரத்த அணுக்கள் தூய்மை அடையுமாம். மேலும், கண்பார்வை குறைபாட்டில் இருந்து பாதுகாப்பதுடன், செரிமான மண்டலத்தையும் ஆரோக்கியத்துடன் வைத்திருக்கும். 

மேலும் படிக்க | இந்த 2 பழங்களை மட்டும் சேர்த்து சாப்பிடவே கூடாது: பல பக்கவிளைவுகள் ஏற்படலாம்

அது மட்டும் இன்றி, தீ காயம் ஏற்பட்டால் வாழை இலை வைத்து கட்டுவது, வாழை இலையில் படுக்க வைப்பது போன்ற பழக்க வழக்கங்கள் காலம் காலமாக நம்மிடையே புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் அதை எதற்காக செய்கிறாகள் என்று செய்பவர்களுக்கே தெரிந்திருக்காது. அதாவது வாழை இலை தீ காயத்தில் உள்ள நச்சு தன்மையை முற்றிலுமாக நீக்கி குளிர்ச்சியை கொடுக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுபோன்று இன்னும் பல பல நோய்களுக்குக்கும், பயன்பாடுகளுக்கும் இந்த வாழை இலை அறுமருந்தாக உள்ளது என்றால் அது மிகையாகாது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News