Unhealthy stones: யாருக்கு சிறுநீர் பையில் கற்கள் உருவாகும், அறிகுறிகள் என்ன?

நோயைப் புரிந்து கொள்வதும், தடுப்பதும் நோயைப் பற்றி கவனம் கொள்வதும் மிக அவசியம், இது சிறுநீரக கற்களின் விஷயத்தில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரியான ஒன்று...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 27, 2021, 10:46 PM IST
  • சிறுநீரகக் கற்கள் யாருக்கு வரும்?
  • 7000 ஆண்டுகள் பழமையான எகிப்து மம்மிகளின் சிறுநீரகத்திலும் கல் இருக்கிறது
  • சிறுநீரகக் கற்களை சுலபமாக குணப்படுத்திவிடலாம்
Unhealthy stones: யாருக்கு சிறுநீர் பையில் கற்கள் உருவாகும், அறிகுறிகள் என்ன? title=

சிறுநீர் பையில் கற்கள் உருவாதல் என்பது பொதுவாக பரவும் நோய். இந்த கற்கள் சொல்ல முடியாத வலியைக் கொண்டு வரும். ஒரு சில சமயங்களில் இந்தக் கற்கள் எந்தவித அறிகுறியும் இல்லாமல் தொடர்ந்து நீடித்து வரக்கூடும். சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் சிறுநீரகப் பாதையில் தொற்றை ஏற்படுத்தி சிறுநீரகங்களை பாதிக்கும். 

அதை விரைவில் சரி செய்யாவிட்டால் சிறுநீரகங்கள் செயலிழக்கும். ஒருமுறை, கற்கள் தோன்றி விட்டால் பிறகு அவை தொடர்வது நீடிக்கும். ஆகவே நோயைப் புரிந்து கொள்வதும், தடுப்பதும் நோயைப் பற்றி கவனம் கொள்வதும் மிக அவசியம்.

7000 ஆண்டுகள் பழமையான எகிப்து மம்மிகளின் சிறுநீரகங்களில் கல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அப்படியானால், சிறுநீரகத்தில் கல் உருவாகும் தன்மை, மனித இனத்தின் தொடக்கம் முதலே இருந்து வந்துள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

தற்போது ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுவதாகவும், இவர்களில் 5 லட்சம் பேர் வரும்போதே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நிலையில் வருவதாகவும் கூறப்படுகிறது.

Also Read | சைவத்தில் இத்தனை வகையா? நீங்கள் எந்த வகை?

ஆனால் தற்போதைய அனைத்து மருத்துவ முறைகளிலும், சிறுநீரகத்தில் கல் உருவாவதை தடுப்பதற்கும், உருவான பின்னர் கரைப்பதற்கும் எளிய சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. இந்த நோய் எந்த அளவிற்கு பரவலான நோயாக மாறி இருக்கிறதோ அந்த அளவிற்கு எளிதில் குணப்படுத்தக்கூடிய நோயாகவும் உள்ளது.

சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள். இவை இரண்டும் தகுந்த விகிதத்தில் இருப்பதால்தான் அவை படிகங்களாகவோ, (crystals) திடப்பொருள்களாகவோ, சிறுநீர்த் தாரைகளில் படியாமல் இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் இவற்றின் விகிதங்களை மாற்றி இவற்றைச் சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் கற்களாக உருவாகின்றன.

சிறுநீர்ரகத்தில் கற்கள் உருவாவதற்கான காரணங்கள்:
கிட்னியில் கல் உருவாவதற்கான காரணங்களை அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. உணவுப்பொருள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறமுடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

சிறுநீரகத்தில் உருவாகும் கற்களில் கால்சியம், பாஸ்பேட் மூலகங்கள் அடங்கிய கற்களே மிகுதியாக காணப்படுகின்றன.

Also Read | சைவத்தில் இத்தனை வகையா? நீங்கள் எந்த வகை?

சிறுநீரகக் கற்களை கொண்டு வரும் காரணிகள் என்ன?

பருகும் குடிநீர் குறைவாக இருந்து, நீர்ச்சத்துவற்றிப் போனால் சிறுநீரகத்தில் கல் ஏற்படலாம் 
பரம்பரை காரணமாக வம்சாவழியாகவும் சிறுநீரகத்தில் கற்கள் வரலாம்.
உண்ணும் உணவு, மாமிசத்தில் புரோட்டின் அதிகமாக இருந்தாலோ, சோடியம், ஆக்ஸலேட் அதிகமாக மற்றும் நார்ச்சத்து மிகக் குறைவாக இருந்தாலோ கற்கள் வரும்.
பொட்டாசியம் அதிகம் உள்ள சிட்ரஸ் பழங்களை உண்ணாமல் இருந்தால் சிறுநீரகத்தில் கல் ஏற்படும்.
ஆண்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் 75 சதவீதமும், சிறுநீர்ப் பையில் 95 சதவீதமும் உருவாகலாம். ஆண்களுக்கு 20 வயதிலிருந்து 70 வயது வரையிலும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகலாம்.
நெடுநாட்களுக்கு நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருப்பவர்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் உருவாகலாம்.
மிக வெப்பத்தோடு அதிக ஈரப்பதம் உள்ள இடங்களில் வசிப்பவருக்கு இது வரும்.
அடிக்கடி சிறுநீர்ப் பாதையில் தொற்றுக்கள் வந்தால் கற்கள் உருவாகும். அல்லது சிறு நீர்ப் பாதை தடப்பட்டால் கற்கள் உருவாகும்.
உணவை சக்தியாக மாற்றும்பொழுது வரக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு. ஒரு சில மருந்துகள் உபயோகப்படுத்துவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகலாம்.

Read Also | Depression: மன அழுத்தம் என்றால் என்ன? பெண்களுக்கு மனசோர்வின் அறிகுறிகள் இவை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News