குளிர்காலத்தில் படுத்தும் ‘கோல்ட் ஃபீட்’ பிரச்சனை: இந்த வைட்டமின் குறைபாடுதான் காரணம்

Cold Feet Causes: கோல்ட் ஃபீ பிரச்சனைக்கு காரணம் வெப்பத்தின் பற்றாக்குறை என பலர் நினைப்பதுண்டு. ஆனால், உண்மையில் இதற்கு ஒரு வைட்டமினின் குறைபாடுதான் காரணம்.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 27, 2023, 05:09 PM IST
  • வைட்டமின் பி-12 குறைபாட்டை சரி செய்ய இறைச்சி மற்றும் மீன் சாப்பிடலாம்.
  • அக்ரூட் பருப்புகள், பிஸ்தா மற்றும் பாதாம் போன்ற சில உலர் பழங்களை உட்கொள்வதன் மூலமும் இந்த வைட்டமின் குறைபாட்டைத் தவிர்க்கலாம்.
  • புளித்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் உங்கள் உடலில் உள்ள இந்த வைட்டமின் குறைபாட்டை நீக்கலாம்.
குளிர்காலத்தில் படுத்தும் ‘கோல்ட் ஃபீட்’ பிரச்சனை: இந்த வைட்டமின் குறைபாடுதான் காரணம் title=

Cold Feet Causes: குளிர்காலத்தில் கால்களில் அதிக குளிர் ஏற்படுவது ஒரு பொதுவான பிரச்சனை. இதை கோல்ட் ஃபீட் என கூறுகிறோம். சிலருக்கு எவ்வளவு சாக்ஸ் போட்டுக்கொண்டாலும், ஹீட்டருக்கு முன்னால் கால்களை காண்பித்தாலும், கம்பளிகளை சுற்றிக்கொண்டாலும் பாதங்கள் மட்டும் குளிர்ச்சியாகவே இருக்கும்.  இதற்கு காரணம் வெப்பத்தின் பற்றாக்குறை என பலர் நினைப்பதுண்டு. ஆனால், உண்மையில் இதற்கு ஒரு வைட்டமினின் குறைபாடுதான் காரணம்.  

குளிர்காலத்தில் உங்கள் கால்கள் எப்போதும் குளிர்ச்சியாக இருந்தால், இதற்குப் பின்னால் உள்ள உண்மையான காரணம் இரத்த சோகை. இதுவும் இந்த வைட்டமின் குறைபாட்டுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வைட்டமின் குறைபாடு முழு உடலையும் பாதிக்கிறது. மேலும் அதன் விளைவு பரவலாக தெரியும். இது எந்த வைட்டமின்? அதன் குறைபாடு காரணமாக உங்கள் கால்கள் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பது ஏன்? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

கோல்ட் ஃபீட் பிரச்சனை எந்த வைட்டமினின் குறைபாட்டால் ஏற்படுகின்றது? (Which Vitamin Deficiency Causes Cold Feet)

வைட்டமின் பி12 குறைபாடு (Vitamin B12 Deficiency) காரணமாக கோல்ட் ஃபீட் பிரச்சனை ஏற்பட்டு, உங்கள் பாதங்கள் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கின்றன. உண்மையில், உடலில் வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால், அது இரத்த சிவப்பணுக்களின் குறைபாட்டிற்கு வழிவகுக்கும், இது முழு இரத்த ஓட்டத்தையும் பாதிக்கிறது. குறிப்பாக கைகள் மற்றும் கால்களில், இரத்த ஓட்டம் இல்லாதது அதிகமாக உணரப்படுகிறது. இது மட்டுமின்றி, வைட்டமின் பி12 குறைபாட்டின் மற்ற அறிகுறிகளும் உணரப்படுகின்றன. எடுத்துக்காட்டால, கை, கால்களில் கூச்ச உணர்வு, உணர்வின்மை போன்றவை ஏற்படும். 

மேலும் படிக்க | உடல் பருமன் பிரச்சனையை தூள் தூளாக்கும் பூசணி விதை தூள்: கண்டிப்பா சாப்பிடுங்க

வைட்டமின் பி12 குறைபாட்டை எவ்வாறு சமாளிப்பது (How to cure Vitamin B12 Deficiency)

வைட்டமின் பி-12 (Vitamin B12) குறைபாடு இருந்தால், உங்கள் தினசரி உணவில் சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். 

- இந்த குறைபாட்டை சரி செய்ய இறைச்சி மற்றும் மீன் சாப்பிடலாம். 

- அக்ரூட் பருப்புகள், பிஸ்தா மற்றும் பாதாம் போன்ற சில உலர் பழங்களை உட்கொள்வதன் மூலமும் இந்த வைட்டமின் குறைபாட்டைத் தவிர்க்கலாம். 

- இது தவிர, புளித்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் உங்கள் உடலில் உள்ள இந்த வைட்டமின் குறைபாட்டை நீக்கலாம்.

- மேலும் பால் மற்றும் பால் பொருட்களை உட்கொள்வதும் இந்த வைட்டமின் குறைபாட்டை நீக்கும்.

உங்கள் பாதங்கள் எப்போதும் குளிர்ச்சியாக இருந்தால் கவலைப்பட வேண்டாம், இந்த வைட்டமின் குறைபாட்டைத் தவிர்த்தால் கோல்ட் ஃபீட் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும். மேலும், உடலில் இரத்த சோகையையும் தவிர்க்கவும், ஏனெனில் அதன் காரணமாக, கைகள் மற்றும் கால்கள் குளிர்ச்சியடையக்கூடும். இரத்த சோகையை போக்க, மாதுளை, பீட்ரூட் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | எலும்புகளை வலுவாக்கும் வைட்டமின் எது? ரத்தத்தில் கால்சியம் இருக்கவும் இது அவசியம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News