சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்க இந்த உணவுகள் மிக அவசியம்

Kidney Diseases: மோசமான வாழ்க்கை முறை, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களால் சிறுநீரக (Kidney) நோய் ஏற்படலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 21, 2024, 09:05 PM IST
  • தைராய்டு மற்றும் சிறுநீரக நோய்களை நிர்வகிக்க, மக்கள் தங்கள் உணவில் கவனமாக இருக்க வேண்டும்.
  • ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க, பழங்கள் மற்றும் காய்கறிகள், மீன், முட்டை, குறைந்த அளவு கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும்.
  • வீட்டில் சமைத்த உணவை உண்பது மிகவும் ஆரோக்கியமானது.
சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்க இந்த உணவுகள் மிக அவசியம் title=

Kidney Diseases: சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அது மோசமடையக்கூடுமோ என்ற அச்சம் எப்போதும் இருக்கும். இருப்பினும், நாள்பட்ட சிறுநீரக நோயை ஆரம்ப கட்டங்களில் நன்கு நிர்வகிக்க முடியும். உங்கள் சிறுநீரகத்தை கவனித்து சரியான உணவை உட்கொள்வது இதய பிரச்சனைகள், எலும்பு நோய் மற்றும் இரத்த சோகை போன்ற பிற உடல்நல பிரச்சனைகளை தவிர்க்க உதவும். சிறுநீரக நோயைக் குணப்படுத்தும் போது, ​​தினசரி உடற்பயிற்சி மற்றும் சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்துக்கொள்வதுடன் உணவு முறையில் மாற்றங்களை செய்வதும் சிறப்பான பலன்களை அளிக்கும். 

சிறுநீரக நோயின் அறிகுறிகள் மற்றும் காரணங்கள் (Reasons and Symptoms of Kidney Diseases)

மோசமான வாழ்க்கை முறை, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களால் சிறுநீரக (Kidney) நோய் ஏற்படலாம். வாந்தி, பசியின்மை, சோர்வு, மன தீவிரம் குறைதல் மற்றும் பல அறிகுறிகள் இதற்கு உள்ளன. சிறுநீரக நோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவது கடினம், ஆனால் இந்த நோய் தீவிரமடைந்தால் உடலில் திரவங்கள், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் கழிவுகளின் அளவு அதிகரிக்கிறது.

தைராய்டு மற்றும் சிறுநீரக நோய்களை நிர்வகிக்க, மக்கள் தங்கள் உணவில் கவனமாக இருக்க வேண்டும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க, பழங்கள் மற்றும் காய்கறிகள், மீன், முட்டை, குறைந்த அளவு கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும். வீட்டில் சமைத்த உணவை உண்பது மிகவும் ஆரோக்கியமானது. பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் அதிக அளவு சோடியம் உள்ளது. ஆகையால் இது போன்ற உணவுகளை தவிர்க்கவும்.

மேலும் படிக்க | உடல் எடையை உடனே குறைக்க இந்த உணவுகள் உங்கள் டயட்டில் இருப்பது அவசியம்

சிறுநீரகத்திற்கான ஆரோக்கியமான உணவுகள் (Healthy Foods For Kidney)

மஞ்சள்

மஞ்சள் (Turmeric) அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. இது தைராய்டு மற்றும் சிறுநீரகங்கள் இரண்டிற்கும் உதவும். இதில் குர்குமின் உள்ளது. இது ஆண்டி-ஆக்சிடெண்ட் விளைவுகளைக் கொண்டுள்ளது. இது சிறுநீரக நோயுடன் தொடர்புடைய வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

தயிர்

இந்திய உணவுகளில் தயிர் (Curd) அயோடின் ஒரு நல்ல மூலமாகும். இது தைராய்டுக்கு அவசியம். சிறுநீரகத்திற்கு உகந்த உணவை உட்கொள்ள, குறைந்த கொழுப்புள்ள தயிரை தேர்வு செய்யவும். ஏனெனில் அதில் பாஸ்பரஸ் குறைவாக இருக்கும்.

பச்சை காய்கறிகள்

பச்சை இலை காய்கறிகள் (Green Vegetables) மற்றும் கீரைகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்ட்கள் நிறைந்துள்ளன. இது தைராய்டு மற்றும் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு முழுமையான உணவாகும். அவற்றில் பொட்டாசியம் குறைவாக உள்ளது. இது சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் இதில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

பயத்தம் பருப்பு

புரதத்தின் வளமான ஆதாரமான பயத்தம் பருப்பில் (Moong Dal) பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் குறைவாக உள்ளது. இது சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லது.

தினை

இந்த பாரம்பரிய தானியங்களில் மற்ற தானியங்களை விட ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் பாஸ்பரஸ் குறைவாகவும் உள்ளது. தினையை (Millets) ரொட்டி வடிவில் உணவில் சேர்க்கலாம் அல்லது இன்னும் பல வழிகளிலும் உட்கொள்ளலாம். 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அசிங்கமான குண்டு குண்டு தொப்பை குறைய இந்த மேஜிக் பானங்கள் போதும்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News