உடல் எடையை குறைக்க ஒரு ஜாலியான வழி: ஜூஸ் குடிச்சிக்கிட்டே வெயிட் குறைக்கலாம்!!

Pomegranate Juice for Weight Loss:  மாதுளை சாறு உடலில் ஹீமோகுளோபின் அளவை சரி செய்யவும், இரத்த சோகைக்கு சிகிச்சை அளிக்கவும், உடலுக்கு ஆற்றலை வழங்கவும், செரிமான ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவியாக இருக்கும் 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 31, 2023, 04:08 PM IST
  • உடல் எடையை குறைக்க மாதுளை சாறு.
  • செரிமான ஆரோக்கியம் மற்றும் வளர்சிதை மாற்றம் நன்றாக இருக்கும்.
  • இதன் மூலம் செரிமான ஆரோக்கியம் பராமரிக்கப்பட்டு, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
உடல் எடையை குறைக்க ஒரு ஜாலியான வழி: ஜூஸ் குடிச்சிக்கிட்டே வெயிட் குறைக்கலாம்!! title=

பழங்கள் மற்றும் காய்கறிகளின் சாறு ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இவற்றை உட்கொள்வதன் மூலம், உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இவை சிறப்பான பலன்களைத் தரும். பல ஆண்டுகளாக மாதுளை சாறு பல்வேறு ஆரோக்கிய நலன்களுக்காக உட்கொள்ளப்படுகிறது. மாதுளை சாறு உடலில் ஹீமோகுளோபின் அளவை சரி செய்யவும், இரத்த சோகைக்கு சிகிச்சை அளிக்கவும், உடலுக்கு ஆற்றலை வழங்கவும், செரிமான ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

உடல் எடையை குறைக்க உதவுமா?

மாதுளை சாறு உடல் எடையை குறைக்க உதவுமா? பல டயட் பிளான்களில், உடல் எடையை குறைக்கும் உணவுகளில் மாதுளை சாற்றை சேர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மாதுளை சாற்றின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

உடல் எடையை குறைக்க மாதுளை சாறு

மாதுளை சாறு புரதம், நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாக இருப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமானத்தை பராமரிக்க உதவுகின்றன. இது எடை இழப்புக்கு உதவும். இதில் அதிக கலோரிகள் இல்லாததால், இதை உட்கொள்வது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், எடை அதிகரிக்கும் அபாயத்தையும் குறைக்கிறது.

மேலும் படிக்க | பாலியல் பிரச்சனையா... ‘இவற்றை’ சாப்பிட ஒரே மாதத்தில் தீர்வு கிடைக்கும்!

செரிமான ஆரோக்கியம் மற்றும் வளர்சிதை மாற்றம் நன்றாக இருக்கும்

மாதுளை செரிமான ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதில் நார்ச்சத்து உள்ளது. இது செரிமான ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. விலங்கு ஆய்வுகளில், மாதுளையில் அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு அம்சங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது ஆரோக்கியமான குடலைப் பராமரிக்கவும், சிறந்த செரிமானத்தை உறுதிப்படுத்தவும் உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை சரியாக வைத்திருக்க உதவுவதால் இது செரிமானம் மற்றும் எடை குறைப்புக்கு உதவுகிறது. 

அழற்சி எதிர்ப்பு பண்புகள் 

மாதுளையில் பாலிபினால்கள் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. பாலிபினால்கள் உடலில் ஏற்படும் பல்வேறு அழற்சி நிலைகளுக்கு சிகிச்சை அளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அழற்சி குடல் நோய் (IBD), முடக்கு வாதம், வளர்சிதை மாற்ற மற்றும் இருதய கோளாறுகள் போன்ற அழற்சி பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதில் இது பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மாதுளை சாற்றின் மற்ற ஆரோக்கிய நன்மைகள்

மாதுளை பல பயனுள்ள ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷமாகும். இதை உட்கொள்வதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. ஆண்டி ஆக்சிடெண்ட் பண்புகள் கொண்ட மாதுளையில் பாலிபினால்கள் நிறைந்துள்ளன. அவை சக்திவாய்ந்த  ஆண்டி ஆக்சிடெண்டுகள் ஆகும். மாதுளை புற்றுநோயைத் தடுப்பதில் வல்லமை படைத்தது. இதனை அடிக்கடி உட்கொளவதால் அல்சைமர் நோயின் ஆபத்து குறைகிறது. இதன் மூலம் செரிமான ஆரோக்கியம் பராமரிக்கப்பட்டு, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். கீல்வாதத்திலும் இது நன்மை பயக்கும். மாதுளை உட்கொள்வதால் இதய நோய் உள்ளவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தைராய்டு பிரச்சனையை சுலபமாக கட்டுப்படுத்த உணவில் சேர்க்க வேண்டிய விதைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News